Tamil Quran - அல்காஷியா - சுற்றி வளைப்பது -அத்தியாயம் : 88-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
88. அல்காஷியா
சுற்றி வளைப்பது
மொத்த வசனங்கள் : 26
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஷியா என்று உள்ளதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
88:1 هَلْ اَتٰٮكَ حَدِيْثُ الْغَاشِيَةِؕ
88:1. சுற்றி வளைக்கும் நிகழ்ச்சி பற்றி உமக்குச் செய்தி கிடைத்ததா?
88:2 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ خَاشِعَةٌ ۙ
88:2. அந்நாளில் சில முகங்கள் (அவமானத்தால்) பணிவுடன் இருக்கும்.
88:3 عَامِلَةٌ نَّاصِبَةٌ ۙ
88:3. அவை (தீயவற்றில்) உறுதியாகச் செயல்பட்டன.
88:4 تَصْلٰى نَارًا حَامِيَةً ۙ
88:4. சுட்டெரிக்கும் நெருப்பில் அவை கருகும்.
88:5 تُسْقٰى مِنْ عَيْنٍ اٰنِيَةٍؕ
88:5. கொதிக்கும் ஊற்றிலிருந்து புகட்டப்படும்.
88:6 لَـيْسَ لَهُمْ طَعَامٌ اِلَّا مِنْ ضَرِيْعٍۙ
88:6. முட்செடி தவிர அவர்களுக்கு எந்த உணவும் இல்லை.
88:7 لَّا يُسْمِنُ وَلَا يُغْنِىْ مِنْ جُوْعٍؕ
88:7. அது கொழுக்க வைக்காது; பசியையும் நீக்காது.
88:8 وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاعِمَةٌ ۙ
88:8. அந்நாளில் சில முகங்கள் மலர்ச்சியுடையதாக இருக்கும்.
88:9 لِّسَعْيِهَا رَاضِيَةٌ ۙ
88:9. தமது உழைப்பிற்காகத் திருப்தி கொள்ளும்.
88:10 فِىْ جَنَّةٍ عَالِيَةٍۙ
88:10. உயர்ந்த சொர்க்கத்தில் இருக்கும்.
88:11 لَّا تَسْمَعُ فِيْهَا لَاغِيَةً ؕ
88:11. அங்கே அவை வீணானதைச் செவியுறாது.
88:12 فِيْهَا عَيْنٌ جَارِيَةٌ ۘ
88:12. அங்கே ஓடும் ஊற்றுகள் உண்டு.
88:13 فِيْهَا سُرُرٌ مَّرْفُوْعَةٌ ۙ
88:13. அங்கே உயர்ந்த கட்டில்கள் உள்ளன.
88:14 وَّاَكْوَابٌ مَّوْضُوْعَةٌ ۙ
88:14. குவளைகள் வைக்கப்பட்டிருக்கும்.
88:15 وَّنَمَارِقُ مَصْفُوْفَةٌ ۙ
88:15. வரிசைப்படுத்தப்பட்ட தலையணைகளும் உள்ளன.
88:16 وَّزَرَابِىُّ مَبْثُوْثَةٌ ؕ
88:16. விரிக்கப்பட்ட கம்பளங்களும் உண்டு.
88:17 اَفَلَا يَنْظُرُوْنَ اِلَى الْاِ بِلِ كَيْفَ خُلِقَتْ
88:17. ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?
399
88:18 وَاِلَى السَّمَآءِ كَيْفَ رُفِعَتْ
88:18. வானம்
507 எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது?
88:19 وَاِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
88:19. மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?
88:20 وَاِلَى الْاَرْضِ كَيْفَ سُطِحَتْ
88:20. பூமி எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது? (என்பதையும் பார்க்க வேண்டாமா?)
88:21 فَذَكِّرْ ؕ اِنَّمَاۤ اَنْتَ مُذَكِّرٌ ؕ
88:21. எனவே அறிவுரை கூறுவீராக! (முஹம்மதே!) நீர் அறிவுரை கூறுபவரே.
81
88:22 لَـسْتَ عَلَيْهِمْ بِمُصَۜيْطِرٍۙ
88:22. அவர்களுக்கு நீர் பொறுப்பாளி அல்லர்.
81
88:23 اِلَّا مَنْ تَوَلّٰى وَكَفَرَۙ
88:24 فَيُعَذِّبُهُ اللّٰهُ الْعَذَابَ الْاَكْبَرَؕ
88:23, 24. எனினும், புறக்கணித்து (ஏகஇறைவனை) மறுப்பவனை மிகக் கடுமையாக அல்லாஹ் தண்டிப்பான்.
26
88:25 اِنَّ اِلَيْنَاۤ اِيَابَهُمْۙ
88:25. அவர்களுடைய மீளுதல் நம்மிடமே உள்ளது.
88:26 ثُمَّ اِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ
88:26. பின்னர் அவர்களை விசாரிப்பது நம்மைச் சேர்ந்தது.