40. கிப்லா குறித்து இரு வேறு விமர்சனங்கள்

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தவுடன் ஜெருஸலத்தில் உள்ள பைத்துல் முகத்தஸ் எனும் ஆலயத்தை நோக்கித் தொழுதார்கள். இது யூதர்களுக்கும் கிப்லாவாக இருந்தது.

 

இதை இரண்டு சாரார் இரு வேறு விதமாக விமர்சனம் செய்தனர்.

 

"இவர் இப்ராஹீம் நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக் கூறுகிறார். ஆனால் இப்ராஹீம் நபியின் கிப்லாவை ஏன் விட்டு விட்டார்?'' என்று மக்காவில் உள்ளவர்கள் கேள்வி எழுப்பினார்கள். ஏனெனில் இப்ராஹீம் நபியின் கிப்லாவாக கஅபா இருந்தது.

 

"இவர் நமது யூத மார்க்கம் தவறானது எனக் கூறுகிறார். அதே சமயம் நமது கிப்லா மட்டும் இனிக்கிறதோ?'' என்று யூதர்கள் விமர்சனம் செய்தனர்.

 

கஅபாவை நோக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டால் இரு சாராரும் விமர்சனம் செய்ய முடியாது. யாருடைய மார்க்கத்தில் இருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்களோ அவரது கிப்லாவையே முன்னோக்குவதால் இது பொருத்தமானது என்பதை நியாய உணர்வு படைத்தோர் ஒப்புக் கொள்வார்கள்.

 

ஆனால் காரணமே இல்லாமல் விமர்சனம் செய்வோரின் விமர்சனத்தை இது தடுத்து நிறுத்தாது. அதனால் தான் "அநீதி இழைத்தோரைத் தவிர மற்றவர்கள் விமர்சிக்கக் கூடாது என்பதற்காக மாற்றப்பட்டது'' என இவ்வசனத்தில் (2:150) கூறப்படுகிறது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 47433