211. அனைவரும் கல்வி கற்க வேண்டுமா?

 

மார்க்கத்தை அறிந்து கொள்வதற்காக சிலராவது புறப்பட்டு இருக்க வேண்டாமா என்று இவ்வசனத்தில் (9:122) கூறப்பட்டுள்ளது.

 

மார்க்கத்தை அறிந்து கொள்வது அனைவருக்கும் அவசியம் என்றாலும் அனைத்து விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பது அனைவருக்கும் கடமையில்லை. அவரவர் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய விஷயங்களை அறிவது தான் கட்டாயக் கடமை.

 

ஆயினும் சிலராவது தமது நேரத்தை ஒதுக்கிக் கல்வி கற்று, மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும். "ஒவ்வொரு பிரிவிலிருந்தும் ஒரு தொகையினர் புறப்பட்டிருக்க வேண்டாமா?'' என்ற சொற்றொடரிலிருந்து இதை அறியலாம்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 270323