280. நரகத்தைக் கடந்தே சொர்க்கம் செல்ல முடியும்
இவ்வசனத்தில் (19:71) ஒவ்வொருவரும் நரகத்திற்கு வந்தாக வேண்டும் எனக் கூறப்படுகிறது. அப்படியானால் நல்லவர்களும் நரகத்திற்குச் செல்வார்களா? என்ற சந்தேகம் எழலாம்.
இது போன்ற சந்தேகம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்களுக்கு எழுந்து அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
நரகின் மேல் ஒரு பாலம் அமைக்கப்பட்டிருக்கும். சொர்க்கம் செல்பவர்கள் அப்பாலத்தைக் கடந்துதான் சொர்க்கம் செல்ல முடியும். அவ்வாறு கடந்து செல்வதைத்தான் இவ்வசனம் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) விளக்கம் அளித்தார்கள்.
(நூல்: முஸ்லிம் 4909)