296. கரு வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்
இவ்வசனத்தில் (23:14) கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகள் கூறப்படுகின்றன. அதில் "பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம்'' என்று கூறப்படுகிறது.
இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் பெறுவதில்லை. வெறும் சதைப்பிண்டமாகவே வளரும். மனிதன் அல்லாத உயிரினத்தின் கருவும், மனிதனின் கருவும் இந்தக் காலகட்டத்தில் ஒரே மாதிரியாகவே அமைந்திருக்கும்.
மூன்று மாதங்கள் கழிந்த பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து அவற்றுக்கு உரிய வடிவம் உருவாகும்.
இதைத்தான் "பின்னர் வேறுபடைப்பாக மாற்றினோம்" என்ற சொற்றொடர் மூலம் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
மிகப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது அது இறைவனின் வார்த்தை என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
அதிக விபரத்திற்கு 314, 486, 487 ஆகிய குறிப்புகளையும் காண்க!