387. பத்து இரவுகள் எது?
பத்து இரவுகள் மீது சத்தியமாக என்று இவ்வசனத்தில் (89:2) கூறப்படுகிறது. இந்த இரவுகள் யாவை என்று குர்ஆனிலோ, ஹதீஸிலோ விளக்கம் கூறப்படவில்லை.
ஆயினும் துல்ஹஜ் மாதம் பத்து நாட்களில் செய்யும் நல்லறம் வேறு எந்த நாட்களிலும் செய்யும் நல்லறத்தை விடச் சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (புகாரி 969, திர்மிதீ 688)
இது அல்லாமல் வேறு எந்தப் பத்து இரவுகள் குறித்தும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் சொல்லப்படவில்லை என்பதால் துல் ஹஜ் மாதம் முதல் பத்து இரவுகளையே இவ்வசனம் குறிக்கக் கூடும்.