385. உறவுகளுக்கு முன்னுரிமை

 

இவ்வசனத்தில் (8:72) ஹிஜ்ரத் செய்து வந்தவர்களான முஹாஜிர்களும், அவர்களுக்கு உதவிய அன்ஸார்களும் ஒருவர் மற்றவருக்கு அதிக உரிமை படைத்தவர்கள் என்று கூறப்படுகிறது.

 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் சொந்த ஊரான மக்காவை விட்டு மதீனாவுக்கு விரட்டப்பட்டனர். அவ்வாறு விரட்டப்பட்டு அகதிகளாக வந்தவர்களையும், உள்ளூர்வாசிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். அதாவது மதீனாவைச் சேர்ந்த ஒருவர் மக்காவிலிருந்து அகதியாக வந்தவரைத் தமது சகோதரராக ஆக்கிக் கொள்ள வேண்டும் எனப் பணித்தார்கள். (பார்க்க: புகாரி 2292, 4580, 6747)

 

இதன் பின்னர் மதீனாவாசி ஒவ்வொருவரும் தமது வீடு, தொழில், நிலம், ஆடை மற்றும் அனைத்து உடமைகளையும் சரிபாதியாகக் கொடுத்து சகோதரத்துவத்தை நிலைநாட்டினார்கள்.

 

இது தற்காலிகமாகச் செய்யப்பட்ட ஏற்பாடு தான். ஒவ்வொரு மனிதருக்கும் தனது குடும்பத்தினர் தான் வாரிசுகளாவர். நெருக்கடியான நேரத்தில் கொள்கைச் சகோதரர்களுக்காக சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்தாலும் இனி அவ்வாறு செய்யக் கூடாது என்று அல்லாஹ் இவ்வசனங்களின் (33:6, 8:75) மூலம் மாற்றி விட்டான்.

 

நம்பிக்கை கொண்டோரையும், ஹிஜ்ரத் செய்தோரையும் விட உறவினர்களே ஒருவருக்கு மற்றவர் முன்னுரிமை பெற்றவர் என்று கூறி முந்தைய கட்டளையை அல்லாஹ் மாற்றி விட்டான்.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 294878