367. அச்சம் தீர வழி

 

இவ்வசனங்களில் (28:31,32) கைத்தடியைப் பாம்பாக மாற்றுதல், கையில் இருந்து வெளிச்சம் வருதல், பயத்தின்போது இரு கைகளையும் ஒடுக்கி பயத்திலிருந்து விடுபடுதல் ஆகிய அற்புதங்கள் மூஸா நபிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளன.

 

அதைத் தொடர்ந்து "இவ்விரண்டும் அற்புதங்கள்' என்று கூறப்பட்டுள்ளது. மூன்று அற்புதங்கள் பற்றிக் கூறிவிட்டு இரண்டு அற்புதங்கள் என ஏன் கூற வேண்டும்? இவ்வாறு கூறியதில் மாபெரும் மனோதத்துவ அறிவியல் அடங்கியுள்ளது.

 

இந்த வசனத்தில் மூன்று விஷயங்கள் கூறப்பட்டாலும் அவற்றில் இரண்டு மட்டுமே மூஸா நபிக்கு வழங்கப்பட்ட அற்புதமாகும். அச்சம் ஏற்படும்போது கைகளை ஒடுக்கிக் கொள்ள வேண்டும் என்பது மூஸா நபிக்கு மட்டும் வழங்கப்பட்ட அற்புதம் அல்ல. அனைவருக்கும் பொதுவானது. இதனால் தான் எண்ணிச் சொல்லும்போது இரண்டு அற்புதங்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

 

அச்சம் ஏற்படும்போது இதயம் கடுமையாக வேலை செய்யும். படபடப்பு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளாமல் பறவை போல கைகளை ஒடுக்கி தொய்வாக வைத்துக் கொண்டால் இதயத்திற்கு அதிக இடம் கிடைக்கின்றது. நெருக்கடி இன்றி அது வேலை செய்யும். படபடப்பு குறைந்து அச்சம் விலகும்.

 

அது மட்டுமின்றி கைகளை ஒடுக்கிக் கொள்ளும்போது யாரோ நம்மை அரவணைப்பது போன்ற எண்ணம் ஏற்பட்டு மேலும் சகஜ நிலைக்கு நம்மைக் கொண்டு வரும்.

 

இந்த மாபெரும் அனுபவ உண்மையைத்தான் இவ்வசனம் கூறுகிறது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 43638