251. பணிவாக நடக்கக் கட்டளை
இவ்வசனங்களில் (15:88, 17:24, 26:215) சிறகைத் தாழ்த்துமாறு மனிதர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது.
இது பணிவைக் குறிப்பிடும் சொல்லாகும்.
சிறகை விரிக்கும்போது பறவைகள் உயரத்திற்குச் செல்கின்றன. சிறகைத் தாழ்த்தும்போது பறவைகள் கீழே வருகின்றன. எனவே சிறகை விரித்தல் என்பதை ஆணவத்திற்காகவும், சிறகைத் தாழ்த்துவது என்பதை பணிவுக்காகவும் அரபு மொழியில் பயன்படுத்துகின்றனர்.