290. அனைவருக்கும் உரிமையான கஅபா

 

பொதுவாக வழிபாட்டுத் தலங்களில் குறிப்பிட்ட பகுதியினருக்கும், சாதியினருக்கும், இனத்தவருக்கும் அதிகமான முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது.

 

ஆனால் முஸ்லிம்களின் முதன்மையான வணக்கத்தலமாகிய கஅபா ஆலயத்தில் அதன் அருகில் வசிப்பவர்களும், தூரத்தில் வசிப்பவர்களான உலக மக்கள் அனைவரும் சமமான உரிமை பெற்றவர்கள். யாருக்கும் அங்கே முதலிடம் என்பது இல்லை.

 

ஒரு இந்தியனுக்கு இருக்கின்ற அதே உரிமை தான் மக்காவைச் சேர்ந்த அரபியனுக்கும் உண்டு என்று இந்த வசனம் (22:25) பிரகடனம் செய்கிறது.

 

ஏற்றத் தாழ்வுகளின் கேந்திரமாக வழிபாட்டுத் தலங்களே அமைந்திருக்கும் சூழ்நிலையில் இஸ்லாம் மாத்திரமே அவற்றைச் சமத்துவத்தின் பிறப்பிடமாக மாற்றி அமைத்திருக்கிறது.

 

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2019 tamilquran.in. Designed by Ahadh Media.
You 're visitors No. 270555