Tamil Quran தமிழ் குர்ஆன் - அஸ்ஸில்ஸால்- நில அதிர்ச்சி -அத்தியாயம் :99-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
99. அஸ்ஸில்ஸால்
நில அதிர்ச்சி
மொத்த வசனங்கள் : 8
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நில அதிர்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
99:1 اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَا ۙ
99:1. பூமி பேரதிர்ச்சியாகக் குலுக்கப்படும்போது,
99:2 وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَا ۙ
99:2. தனது சுமைகளை பூமி வெளிப்படுத்தும்போது,
99:3 وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَا ۚ
99:3. இதற்கு என்ன நேர்ந்தது? என்று மனிதன் கேட்கும்போது,
99:4 يَوْمَٮِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَا ۙ
99:5 بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَا ؕ
99:4, 5. அந்நாளில்
1 தனது இறைவன் இவ்வாறு அறிவித்ததாக தனது செய்திகளை அது அறிவிக்கும்.
26
99:6 يَوْمَٮِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْؕ
99:6. அந்நாளில்
1 மக்கள் தமது செயல்களைக் காண்பதற்காகப் பல பிரிவினர்களாக ஆவார்கள்.
99:7 فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ؕ
99:7. அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார்.
99:8 وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ
99:8. அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார்.