26.    அஷ் ஷுஅரா

கவிஞர்கள்

மொத்த வசனங்கள் : 227

இந்த அத்தியாயத்தின் 221வது வசனம் முதல் 227வது வசனம் வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், அவர்களில் நல்ல கவிஞர்களும் கெட்ட கவிஞர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுவதால் கவிஞர்கள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

26:1   طٰسٓمّٓ‏ 
26:1. தா, ஸீம், மீம்.2
26:2   تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْنِ‏ 
26:2. இவை தெளிவான வேதத்தின் வசனங்கள்.
26:3   لَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ اَلَّا يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ‏ 
26:3. அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக உம்மையே அழித்துக் கொள்வீர் போலும்.
26:4   اِنْ نَّشَاْ نُنَزِّلْ عَلَيْهِمْ مِّنَ السَّمَآءِ اٰيَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خٰضِعِيْنَ‏ 
26:4. நாம் நினைத்தால் வானிலிருந்து அவர்களுக்கு அற்புதத்தை இறக்குவோம். அப்போது அவர்களின் கழுத்துக்கள் அதன் முன்னே பணிந்து விடும்.
26:5   وَمَا يَاْتِيْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ مُعْرِضِيْنَ‏ 
26:5. அளவற்ற அருளாளனிடமிருந்து புதிதாக எந்த அறிவுரை வந்தாலும் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.
26:6   فَقَدْ كَذَّبُوْا فَسَيَاْتِيْهِمْ اَنْۢـبٰٓــؤُا مَا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ‏ 
26:6. அவர்கள் பொய்யெனக் கருதினர். எதை அவர்கள் கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது பற்றிய செய்திகள் அவர்களை வந்தடையும்.
26:7   اَوَلَمْ يَرَوْا اِلَى الْاَرْضِ كَمْ اَنْۢبَتْنَا فِيْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِيْمٍ‏ 
26:7. பூமியில் மதிப்புமிக்க ஒவ்வொரு வகையிலும் எத்தனையோ (பயிர்களை) முளைக்கச் செய்துள்ளோம் என்பதை அவர்கள் காணவில்லையா?
26:8   اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏ 
26:8. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:9   وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏ 
26:9. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:10   وَاِذْ نَادٰى رَبُّكَ مُوْسٰۤى اَنِ ائْتِ الْقَوْمَ الظّٰلِمِيْنَۙ‏ 
26:11   قَوْمَ فِرْعَوْنَ‌ؕ اَلَا يَتَّقُوْنَ‌‏ 
26:12   قَالَ رَبِّ اِنِّىْۤ اَخَافُ اَنْ يُّكَذِّبُوْنِؕ‏ 
26:10, 11, 12. "அநீதி இழைக்கும் கூட்டமான ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தவரிடம் செல்வீராக! அவர்கள் அஞ்ச வேண்டாமா?'' என்று உமது இறைவன் மூஸாவை அழைத்தபோது "என் இறைவா! அவர்கள் என்னைப் பொய்யரெனக் கருதுவார்கள் என நான் அஞ்சுகிறேன்'' என்று அவர் கூறினார்.26
26:13   وَيَضِيْقُ صَدْرِىْ وَلَا يَنْطَلِقُ لِسَانِىْ فَاَرْسِلْ اِلٰى هٰرُوْنَ‏ 
26:13. என் உள்ளம் நெருக்கடிக்கு உள்ளாகும். என் நாவும் எழாது. எனவே ஹாரூனைத் தூதராக அனுப்புவாயாக!
26:14   وَلَهُمْ عَلَىَّ ذَنْۢبٌ فَاَخَافُ اَنْ يَّقْتُلُوْنِ‌ۚ‏ 
26:14. "அவர்களிடம் என் மீது ஒரு (கொலைக்) குற்றச்சாட்டு உள்ளது.375 எனவே அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள் என அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்.)
26:15   قَالَ كَلَّا‌ ۚ فَاذْهَبَا بِاٰيٰتِنَآ‌ اِنَّا مَعَكُمْ مُّسْتَمِعُوْنَ‏ 
26:15. "அவ்வாறில்லை! நமது சான்றுகளுடன் இருவரும் செல்லுங்கள்! நாம் உங்களுடன் செவியுற்றுக் கொண்டிருப்போம்'' என்று (இறைவன்) கூறினான்.
26:16   فَاْتِيَا فِرْعَوْنَ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلُ رَبِّ الْعٰلَمِيْنَۙ‏ 
26:17   اَنْ اَرْسِلْ مَعَنَا بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏ 
26:16, 17. ஃபிர்அவ்னிடம் சென்று "நாங்கள் அகிலத்தின் இறைவனுடைய தூதர்களாவோம். எங்களுடன் இஸ்ராயீலின் மக்களை அனுப்பி விடு!''181 என்று கூறுங்கள்! (என்றும் இறைவன் கூறினான்.)26
26:18   قَالَ اَلَمْ نُرَبِّكَ فِيْنَا وَلِيْدًا وَّلَبِثْتَ فِيْنَا مِنْ عُمُرِكَ سِنِيْنَۙ‏ 
26:18. "குழந்தையாக இருந்த நிலையில் நாம் உம்மை எடுத்து வளர்க்கவில்லையா? உமது வாழ்நாளில் பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்தீரே!'' என்று அவன் (ஃபிர்அவ்ன்) கூறினான்.
26:19   وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِىْ فَعَلْتَ وَاَنْتَ مِنَ الْكٰفِرِيْنَ‏ 
26:19. "நீர் செய்த உமது செயலையும் செய்து முடித்தீர். நீர் நன்றி கெட்டவர்'' (என்றும் கூறினான்.)
26:20   قَالَ فَعَلْتُهَاۤ اِذًا وَّاَنَا مِنَ الضَّآلِّيْنَؕ‏ 
26:20. "நான் நேர்வழி பெறாதவனாக இருந்த நேரத்தில் அதைச் செய்தேன்'' என அவர் கூறினார்.
26:21   فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِىْ رَبِّىْ حُكْمًا وَّجَعَلَنِىْ مِنَ الْمُرْسَلِيْنَ‏ 
26:21. "உங்களுக்கு அஞ்சி உங்களை விட்டு ஓடினேன். அப்போது என் இறைவன் எனக்கு ஞானத்தை வழங்கி தூதர்களில் ஒருவராக என்னை நியமித்தான்''
26:22   وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَىَّ اَنْ عَبَّدْتَّ بَنِىْۤ اِسْرَآءِيْلَ ؕ‏ 
26:22. "இஸ்ராயீலின் மக்களை நீ அடிமைப்படுத்துவதற்கு (நியாயம் கற்பிக்க) எனக்குச் செய்த அருட்கொடையை நீ சொல்லிக் காட்டுகிறாய்!''181 (என்றும் கூறினார்)
26:23   قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِيْنَؕ‏ 
26:23. "அகிலத்தின் இறைவன் என்றால் என்ன?'' என்று ஃபிர்அவ்ன் கேட்டான்.
26:24   قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَاؕ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ‏ 
26:24. "நீங்கள் உறுதியாக நம்பினால் வானங்கள்,507 பூமி, மற்றும் அவ்விரண்டுக்கும் இடைப்பட்டதற்கும் அவனே இறைவன்'' என்றார்.
26:25   قَالَ لِمَنْ حَوْلَهٗۤ اَلَا تَسْتَمِعُوْنَ‏ 
26:25. தன்னைச் சுற்றியிருந்தோரிடம் "(இதை) நீங்கள் செவிமடுக்கிறீர்களா?'' என்று அவன் கேட்டான்.
26:26   قَالَ رَبُّكُمْ وَرَبُّ اٰبَآٮِٕكُمُ الْاَوَّلِيْنَ‏ 
26:26. "அவன் உங்களுக்கும் இறைவன். உங்கள் முன்னோர்களான மூதாதையருக்கும் இறைவன்'' என்று அவர் கூறினார்.
26:27   قَالَ اِنَّ رَسُوْلَـكُمُ الَّذِىْۤ اُرْسِلَ اِلَيْكُمْ لَمَجْنُوْنٌ‏ 
26:27. "உங்களிடம் அனுப்பப்பட்டுள்ள உங்கள் தூதர் பைத்தியக்காரர் தான்'' என்று அவன் கூறினான்.
26:28   قَالَ رَبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَمَا بَيْنَهُمَا ؕ اِنْ كُنْتُمْ تَعْقِلُوْنَ‏ 
26:28. "நீங்கள் விளங்கிக் கொள்வோராக இருந்தால் கிழக்குக்கும், மேற்குக்கும், அவற்றுக்கு இடைப்பட்டதற்கும் அவன் இறைவன்'' என்று அவர் கூறினார்.
26:29   قَالَ لَٮِٕنِ اتَّخَذْتَ اِلٰهًا غَيْرِىْ لَاَجْعَلَـنَّكَ مِنَ الْمَسْجُوْنِيْنَ‏ 
26:29. "என்னைத் தவிர வேறு கடவுளை நீர் கற்பனை செய்தால் உம்மைச் சிறைப்படுத்துவேன்'' என்று அவன் கூறினான்.
26:30   قَالَ اَوَلَوْ جِئْتُكَ بِشَىْءٍ مُّبِيْنٍ‌ۚ‏ 
26:30. "தெளிவான ஒரு பொருளை நான் உன்னிடம் கொண்டு வந்தாலுமா?'' என்று அவர் கேட்டார்.
26:31   قَالَ فَاْتِ بِهٖۤ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏ 
26:31. "நீர் உண்மையாளராக இருந்தால் அதைக் கொண்டு வாரும்'' என்று அவன் கூறினான்.
26:32   ‌فَاَ لْقٰى عَصَاهُ فَاِذَا هِىَ ثُعْبَانٌ مُّبِيْنٌ‌ ۖ ‌‌ۚ‏ 
26:32. அவர் தமது கைத்தடியைப் போட்டார். உடனே அது பெரிய பாம்பாக ஆனது.
26:33   وَّنَزَعَ يَدَهٗ فَاِذَا هِىَ بَيْضَآءُ لِلنّٰظِرِيْنَ‏ 
26:33. தமது கையை வெளிப்படுத்தினார். அது பார்ப்போருக்கு வெண்மையாக இருந்தது.
26:34   قَالَ لِلْمَلَاِ حَوْلَهٗۤ اِنَّ هٰذَا لَسٰحِرٌ عَلِيْمٌۙ‏ 
26:34. "இவர் திறமைமிக்க சூனியக்காரர்'' என்று தன்னைச் சுற்றியிருந்த சபையோரிடம் அவன் கூறினான்.357
26:35   يُّرِيْدُ اَنْ يُّخْرِجَكُمْ مِّنْ اَرْضِكُمْ بِسِحْرِهٖ ‌ۖ  فَمَاذَا تَاْمُرُوْنَ‌‏ 
26:35. "தனது சூனியத்தின்285 மூலம் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற இவர் நினைக்கிறார். நீங்கள் என்ன உத்தரவிடுகிறீர்கள்?'' (என்றும் கேட்டான்).357
26:36   قَالُوْۤا اَرْجِهْ وَاَخَاهُ وَابْعَثْ فِى الْمَدَآٮِٕنِ حٰشِرِيْنَۙ‏ 
26:37   يَاْتُوْكَ بِكُلِّ سَحَّارٍ عَلِيْمٍ‏ 
26:36, 37. "இவருக்கும், இவரது சகோதரருக்கும் அவகாசம் அளிப்பீராக! பல நகரங்களுக்கும் ஆள் திரட்டுவோரை அனுப்புவீராக! அவர்கள் திறமையான ஒவ்வொரு சூனியக்காரனையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்'' (என்றும் சபையோர் கூறினர்).26
26:38   فَجُمِعَ السَّحَرَةُ لِمِيْقَاتِ يَوْمٍ مَّعْلُوْمٍۙ‏ 
26:38. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சூனியக்காரர்கள் ஒன்று திரட்டப்பட்டனர்.
26:39   وَّقِيْلَ لِلنَّاسِ هَلْ اَنْـتُمْ مُّجْتَمِعُوْنَۙ‏ 
26:40   لَعَلَّنَا نَـتَّبِعُ السَّحَرَةَ اِنْ كَانُوْا هُمُ الْغٰلِبِيْنَ‏ 
26:39, 40. சூனியக்காரர்கள் வெற்றி பெற்றால் அவர்களை நாம் பின்பற்றுவதற்காக நீங்கள் ஒன்று கூடுவீர்களா? என்று மக்களுக்கும் கூறப்பட்டது.26
26:41   فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَٮِٕنَّ لَـنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِيْنَ‏ 
26:41. சூனியக்காரர்கள் வந்தவுடன் "நாங்கள் வெற்றி பெற்றால் எங்களுக்குப் பரிசு உண்டா?'' என்று ஃபிர்அவ்னிடம் கேட்டனர்.
26:42   قَالَ نَعَمْ وَاِنَّكُمْ اِذًا لَّمِنَ الْمُقَرَّبِيْنَ‏ 
26:42. "ஆம்! அப்போது நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்கள்'' என்று அவன் கூறினான்.
26:43   قَالَ لَهُمْ مُّوْسٰۤى اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ‏ 
26:43. "நீங்கள் போடவிருப்பதைப் போடுங்கள்!'' என்று அவர்களிடம் மூஸா கூறினார்.
26:44   فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِيَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَـنَحْنُ الْغٰلِبُوْنَ‏ 
26:44. அவர்கள் தமது கயிறுகளையும், கைத்தடிகளையும் போட்டனர். "ஃபிர்அவ்னின் கண்ணியத்தின் மீது சத்தியமாக!379 நாங்களே வெல்பவர்கள்'' என்றனர்.
26:45   فَاَ لْقٰى مُوْسٰى عَصَاهُ فَاِذَا هِىَ تَلْقَفُ مَا يَاْفِكُوْنَ‌ ۖ ‌ۚ‏ 
26:45. உடனே மூஸா தமது கைத்தடியைப் போட்டார். அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விட்டது.357
26:46   فَاُلْقِىَ السَّحَرَةُ سٰجِدِيْنَۙ‏ 
26:46. சூனியக்காரர்கள் (இறைவனுக்கு) ஸஜ்தாச் செய்து, விழுந்தனர்.357
26:47   قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِيْنَۙ‏ 
26:48   رَبِّ مُوْسٰى وَهٰرُوْنَ‏ 
26:47, 48. "மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்'' என்றனர்.26
26:49   قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَـكُمْ‌ۚ اِنَّهٗ لَـكَبِيْرُكُمُ الَّذِىْ عَلَّمَكُمُ السِّحْرَ‌ۚ فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ۙ لَاُقَطِّعَنَّ اَيْدِيَكُمْ وَاَرْجُلَـكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُصَلِّبَنَّكُمْ اَجْمَعِيْنَ‌ۚ‏ 
26:49. "நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? உங்களுக்குச் சூனியத்தைக் கற்றுக் கொடுத்த உங்களின் குரு இவரே. (இதன் விளைவை) பின்னர் அறிவீர்கள். உங்களை மாறுகால் மாறுகை வெட்டுவேன்; உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்'' என்று அவன் கூறினான்.
26:50   قَالُوْا لَا ضَيْرَ‌ اِنَّاۤ اِلٰى رَبِّنَا مُنْقَلِبُوْنَ‌ۚ‏ 
26:50. "கவலையில்லை. நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறினர்.
26:51   اِنَّا نَطْمَعُ اَنْ يَّغْفِرَ لَـنَا رَبُّنَا خَطٰيٰـنَاۤ اَنْ كُنَّاۤ اَوَّلَ الْمُؤْمِنِيْنَؕ‏ 
26:51. "நம்பிக்கை கொண்டோரில் முதன்மையானோராக நாங்கள் ஆனதற்காக எங்கள் தவறுகளை எங்கள் இறைவன் எங்களுக்கு மன்னிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்'' (என்றும் கூறினர்).
26:52   وَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنْ اَسْرِ بِعِبَادِىْۤ اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ‏ 
26:52. "என் அடியார்களை இரவில் அழைத்துச் செல்வீராக! நீங்கள் (எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம்.
26:53   فَاَرْسَلَ فِرْعَوْنُ فِى الْمَدَآٮِٕنِ حٰشِرِيْنَ‌ۚ‏ 
26:53. ஆள் திரட்டுவோரைப் பல நகரங்களுக்கும் ஃபிர்அவ்ன் அனுப்பினான்.
26:54   اِنَّ هٰٓؤُلَاۤءِ لَشِرْذِمَةٌ قَلِيْلُوْنَۙ‏ 
26:54. அவர்கள் சிறிய கூட்டத்தினரே.
26:55   وَاِنَّهُمْ لَـنَا لَـغَآٮِٕظُوْنَۙ‏ 
26:55. அவர்கள் நமக்குக் கோபத்தை ஏற்படுத்துகின்றனர்.
26:56   وَاِنَّا لَجَمِيْعٌ حٰذِرُوْنَؕ‏ 
26:56. நாம் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியவர்கள். (என்று ஃபிர்அவ்ன் கூறினான்)
26:57   فَاَخْرَجْنٰهُمْ مِّنْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏ 
26:58   وَّكُنُوْزٍ وَّمَقَامٍ كَرِيْمٍۙ‏ 
26:57, 58. தோட்டங்களையும், நீரூற்றுகளையும், பொக்கிஷங்களையும், மதிப்புமிக்க தங்குமிடங்களையும் விட்டும் அவர்களை வெளியேற்றினோம்.26
26:59   كَذٰلِكَؕ وَاَوْرَثْنٰهَا بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏ 
26:59. இப்படித்தான் இஸ்ராயீலின் மக்களை அவற்றுக்கு வாரிசுகளாக்கினோம்.
26:60   فَاَ تْبَعُوْهُمْ مُّشْرِقِيْنَ‏ 
26:60. காலையில் (ஃபிர்அவ்ன் கூட்டத்தினர்) அவர்களைப் பின்தொடர்ந்தனர்.
26:61   فَلَمَّا تَرَآءَ الْجَمْعٰنِ قَالَ اَصْحٰبُ مُوْسٰٓى اِنَّا لَمُدْرَكُوْنَ‌ۚ‏ 
26:61. இரு கூட்டத்தினரும் நேருக்குநேர் பார்த்துக் கொண்டபோது "நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்'' என்று மூஸாவின் சகாக்கள் கூறினர்.
26:62   قَالَ كَلَّا‌‌ ۚ اِنَّ مَعِىَ رَبِّىْ سَيَهْدِيْنِ‏ 
26:62. "அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்'' என்று அவர் கூறினார்.
26:63   فَاَوْحَيْنَاۤ اِلٰى مُوْسٰٓى اَنِ اضْرِبْ بِّعَصَاكَ الْبَحْرَ‌ؕ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيْمِ‌ۚ‏ 
26:63. "உமது கைத்தடியால் கடலில் அடிப்பீராக'' என்று மூஸாவுக்கு அறிவித்தோம். உடனே அது பிளந்தது. ஒவ்வொரு பிளவும் பெரும் மலை போன்று ஆனது.
26:64   وَاَزْلَـفْنَا ثَمَّ الْاٰخَرِيْنَ‌ۚ‏ 
26:64. அங்கே மற்றவர்களையும் நெருங்கச் செய்தோம்.
26:65   وَاَنْجَيْنَا مُوْسٰى وَمَنْ مَّعَهٗۤ اَجْمَعِيْنَ‌ۚ‏ 
26:65. மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம்.
26:66   ثُمَّ اَغْرَقْنَا الْاٰخَرِيْنَ‌ؕ‏ 
26:66. பின்னர் மற்றவர்களை மூழ்கடித்தோம்.
26:67   اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً ‌ ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏ 
26:67. இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இருக்கவில்லை.
26:68   وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏ 
26:68. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:69   وَاتْلُ عَلَيْهِمْ نَبَاَ اِبْرٰهِيْمَ‌ۘ‏ 
26:69. அவர்களிடம் இப்ராஹீமின் வரலாறைக் கூறுவீராக!
26:70   اِذْ قَالَ لِاَبِيْهِ وَقَوْمِهٖ مَا تَعْبُدُوْنَ‏ 
26:71   قَالُوْا نَـعْبُدُ اَصْنَامًا فَنَظَلُّ لَهَا عٰكِفِيْنَ‏ 
26:70, 71. "எதை வணங்குகிறீர்கள்?'' என்று தமது தந்தையிடமும் தமது சமுதாயத்தினரிடமும் அவர் கேட்டபோது "நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வணங்குவதில் உறுதியாக இருக்கிறோம்'' என்றனர்.26
26:72   قَالَ هَلْ يَسْمَعُوْنَكُمْ اِذْ تَدْعُوْنَۙ‏ 
26:73   اَوْ يَنْفَعُوْنَكُمْ اَوْ يَضُرُّوْنَ‏ 
26:72, 73. "நீங்கள் அழைக்கும்போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ, தீமையோ செய்கின்றனவா?'' என்று அவர் கேட்டார்.26
26:74   قَالُوْا بَلْ وَجَدْنَاۤ اٰبَآءَنَا كَذٰلِكَ يَفْعَلُوْنَ‏ 
26:74. "அவ்வாறில்லை. எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம்'' என்று அவர்கள் கூறினர்.
26:75   قَالَ اَفَرَءَيْتُمْ مَّا كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏ 
26:76   اَنْـتُمْ وَاٰبَآؤُكُمُ الْاَقْدَمُوْنَ ‌ۖ ‏ 
26:77   فَاِنَّهُمْ عَدُوٌّ لِّىْۤ اِلَّا رَبَّ الْعٰلَمِيْنَۙ‏ 
26:75, 76, 77. "அகிலத்தின் இறைவனைத் தவிர நீங்களும், முந்திச் சென்ற உங்கள் முன்னோர்களும் எதை வணங்குவோராக இருக்கிறீர்கள்?'' என்பதைக் கவனித்தீர்களா? அவை எனது எதிரிகளாகும்26
26:78   الَّذِىْ خَلَقَنِىْ فَهُوَ يَهْدِيْنِۙ‏ 
26:78. அவனே என்னைப் படைத்தான். அவனே எனக்கு நேர்வழி காட்டுகிறான்.
26:79   وَ الَّذِىْ هُوَ يُطْعِمُنِىْ وَيَسْقِيْنِۙ‏ 
26:79. அவனே எனக்கு உணவளித்து (தண்ணீர்) பருகத் தருகிறான்.463
26:80   وَاِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِيْنِ ۙ‏ 
26:80. நான் நோயுறும்போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.
26:81   وَالَّذِىْ يُمِيْتُنِىْ ثُمَّ يُحْيِيْنِۙ‏ 
26:81. அவனே என்னை மரணிக்கச் செய்வான். பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான்.
26:82   وَالَّذِىْۤ اَطْمَعُ اَنْ يَّغْفِرَ لِىْ خَطِٓیْــَٔـتِىْ يَوْمَ الدِّيْنِ ؕ‏ 
26:82. "தீர்ப்பு நாளில்1 என் தவறை அவன் மன்னிக்க வேண்டும்'' என ஆசைப்படுகிறேன்.
26:83   رَبِّ هَبْ لِىْ حُكْمًا وَّاَلْحِقْنِىْ بِالصّٰلِحِيْنَۙ‏ 
26:83. என் இறைவா! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக! என்னை நல்லோருடன் சேர்ப்பாயாக!
26:84   وَاجْعَلْ لِّىْ لِسَانَ صِدْقٍ فِى الْاٰخِرِيْنَۙ‏ 
26:84. பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!
26:85   وَاجْعَلْنِىْ مِنْ وَّرَثَةِ جَنَّةِ النَّعِيْمِۙ‏ 
26:85. இன்பமான சொர்க்கத்தின் வாரிசுகளில் என்னையும் ஆக்குவாயாக!
26:86   وَاغْفِرْ لِاَبِىْۤ اِنَّهٗ كَانَ مِنَ الضَّآلِّيْنَۙ‏ 
26:86. என் தந்தையை மன்னிப்பாயாக! அவர் வழி தவறியவராக இருக்கிறார்.247
26:87   وَلَا تُخْزِنِىْ يَوْمَ يُبْعَثُوْنَۙ‏ 
26:87. (மக்கள்) மீண்டும் உயிர்ப்பிக்கப்படும் நாளில்1 என்னை இழிவுபடுத்தி விடாதே!
26:88   يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَّلَا بَنُوْنَۙ‏ 
26:89   اِلَّا مَنْ اَتَى اللّٰهَ بِقَلْبٍ سَلِيْمٍؕ‏ 
26:88, 89. அல்லாஹ்விடம் தூய உள்ளத்துடன் வருவதைத் தவிர, செல்வமோ, மக்களோ அந்நாளில் பயன் தராது.26
26:90   وَاُزْلِفَتِ الْجَـنَّةُ لِلْمُتَّقِيْنَۙ‏ 
26:90. (இறைவனை) அஞ்சுவோருக்கு சொர்க்கம் அருகில் கொண்டு வரப்படும்.
26:91   وَبُرِّزَتِ الْجَحِيْمُ لِلْغٰوِيْنَۙ‏ 
26:91. வழிகெட்டவர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்.
26:92   وَقِيْلَ لَهُمْ اَيْنَمَا كُنْتُمْ تَعْبُدُوْنَۙ‏ 
26:93   مِنْ دُوْنِ اللّٰهِؕ هَلْ يَنْصُرُوْنَكُمْ اَوْ يَنْتَصِرُوْنَؕ‏ 
26:92, 93. "அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே? அவர்கள் உங்களுக்கு உதவுவார்களா? அல்லது தமக்குத் தாமே உதவிக் கொள்வார்களா?'' என்று அவர்களிடம் கேட்கப்படும்.26
26:94   فَكُبْكِبُوْا فِيْهَا هُمْ وَالْغَاوٗنَۙ‏ 
26:95   وَجُنُوْدُ اِبْلِيْسَ اَجْمَعُوْنَؕ‏ 
26:94, 95. அவர்களும், வழிகெட்டவர்களும், இப்லீஸின் படையினர் அனைவரும் அதில் முகம் குப்புற தள்ளப்படுவார்கள்.26
26:96   قَالُوْا وَهُمْ فِيْهَا يَخْتَصِمُوْنَۙ‏ 
26:97   تَاللّٰهِ اِنْ كُنَّا لَفِىْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ‏ 
26:98   اِذْ نُسَوِّيْكُمْ بِرَبِّ الْعٰلَمِيْنَ‏ 
26:96, 97, 98. "உங்களை அகிலத்தின் இறைவனுக்குச் சமமாக்கியபோது அல்லாஹ்வின் மீது ஆணையாக தெளிவான வழிகேட்டில் இருந்தோம்'' என்று அங்கே தர்க்கம் செய்து கொண்டே கூறுவார்கள்.26
26:99   وَمَاۤ اَضَلَّنَاۤ اِلَّا الْمُجْرِمُوْنَ‏ 
26:99. இந்தக் குற்றவாளிகளே எங்களை வழிகெடுத்தனர்.
26:100   فَمَا لَـنَا مِنْ شٰفِعِيْنَۙ‏ 
26:100. எங்களுக்குப் பரிந்துரை செய்வோர்17 எவருமில்லை.
26:101   وَلَا صَدِيْقٍ حَمِيْمٍ‏ 
26:101. உற்ற நண்பனும் இல்லை.
26:102   فَلَوْ اَنَّ لَـنَا كَرَّةً فَنَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏ 
26:102. உலகுக்குத் திரும்பிச் செல்லுதல் எங்களுக்கு இருக்குமானால் நம்பிக்கை கொண்டோரில் ஆகியிருப்போம் (என்றும் கூறுவார்கள்).
26:103   اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏ 
26:103. இதில் தக்க சான்று உள்ளது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:104   وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏ 
26:104. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:105   كَذَّبَتْ قَوْمُ نُوْحِ ۨالْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏ 
26:105. நூஹுடைய சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.
26:106   اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ نُوْحٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ 
26:106. (இறைவனை) அஞ்ச மாட்டீர்களா? என்று அவர்களின் சகோதரர் நூஹு அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
26:107   اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏ 
26:107. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர்;
26:108   فَاتَّقُوْا اللّٰهَ وَ اَطِيْعُوْنِ‌ۚ‏ 
26:108. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:109   وَمَاۤ اَسْـــَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ‌ۚ‏ 
26:109. உங்களிடம் நான் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.
26:110   فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ ؕ‏ 
26:110. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்! (என்றும் கூறினார்.)
26:111   قَالُوْۤا اَنُؤْمِنُ لَكَ وَاتَّبَعَكَ الْاَرْذَلُوْنَؕ‏ 
26:111. "மிகவும் தாழ்ந்தோர் உம்மைப் பின்பற்றியுள்ள நிலையில் உம்மை நம்புவோமா?'' என்று அவர்கள் கூறினர்.
26:112   قَالَ وَمَا عِلْمِىْ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‌ۚ‏ 
26:112. "அவர்கள் செய்து கொண்டிருப்பது (பற்றிய முடிவு என்ன என்பது) எனக்குத் தெரியாது'' என்று அவர் கூறினார்.
26:113   اِنْ حِسَابُهُمْ اِلَّا عَلٰى رَبِّىْ‌ لَوْ تَشْعُرُوْنَ‌ۚ‏ 
26:113. "அவர்களை விசாரிப்பது எனது இறைவனின் பொறுப்பாகும். விளங்க மாட்டீர்களா?''
26:114   وَمَاۤ اَنَا بِطَارِدِ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏ 
26:114. "நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாக இல்லை''
26:115   اِنْ اَنَا اِلَّا نَذِيْرٌ مُّبِيْنٌؕ‏ 
26:115. "நான் தெளிவாக எச்சரிப்பவன் தவிர வேறில்லை'' (என்றும் கூறினார்.)
26:116   قَالُوْا لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ يٰـنُوْحُ لَـتَكُوْنَنَّ مِنَ الْمَرْجُوْمِيْنَؕ‏ 
26:116. "நூஹே! நீர் விலகிக் கொள்ளவில்லையானால் கல்லால் எறிந்து கொல்லப்படுவீர்!'' என்று அவர்கள் கூறினர்.
26:117   قَالَ رَبِّ اِنَّ قَوْمِىْ كَذَّبُوْنِ‌ ۖ‌ۚ‏ 
26:117. "என் இறைவா! என் சமுதாயத்தினர் என்னைப் பொய்யரெனக் கருதுகின்றனர்'' என்று அவர் கூறினார்.
26:118   فَافْتَحْ بَيْنِىْ وَبَيْنَهُمْ فَتْحًا وَّنَجِّنِىْ وَمَنْ مَّعِىَ مِنَ الْمُؤْمِنِيْنَ‏ 
26:118. "எனக்கும், அவர்களுக்கும் இடையே தெளிவான தீர்ப்புக் கூறுவாயாக! என்னையும், என்னுடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் காப்பாற்றுவாயாக!'' (என்றும் கூறினார்).
26:119   فَاَنْجَيْنٰهُ وَمَنْ مَّعَهٗ فِى الْـفُلْكِ الْمَشْحُوْنِ‌ۚ‏ 
26:119. எனவே அவரையும், அவருடன் இருந்தோரையும் நிரப்பப்பட்ட கப்பலில் காப்பாற்றினோம்.
26:120   ثُمَّ اَغْرَقْنَا بَعْدُ الْبٰقِيْنَؕ‏ 
26:120. பின்னர் எஞ்சியோரை மூழ்கடித்தோம்.
26:121   اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً‌  ؕ وَّمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏ 
26:121. இதில் தக்க சான்று உள்ளது.222 அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:122   وَ اِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏ 
26:122. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:123   كَذَّبَتْ عَادُ اۨلْمُرْسَلِيْنَ ‌ۖ ‌ۚ‏ 
26:123. ஆது சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.
26:124   اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ هُوْدٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ 
26:124. "இறைவனுக்கு அஞ்ச மாட்டீர்களா'' என்று அவர்களின் சகோதரர் ஹூது, அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
26:125   اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌ‌ۙ‏ 
26:125. நான் உங்களுக்கு நம்பிக்கையுள்ள தூதராவேன்.
26:126   فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ ۚ‏ 
26:126. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:127   وَمَاۤ اَسْــَٔـلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ؕ‏ 
26:127. நான் உங்களிடம் இதற்காக எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.
26:128   اَتَبْنُوْنَ بِكُلِّ رِيْعٍ اٰيَةً تَعْبَثُوْنَۙ‏ 
26:128. ஒவ்வொரு உயர்ந்த இடத்திலும் வீணாக சின்னங்களை எழுப்புகிறீர்களா?
26:129   وَ تَتَّخِذُوْنَ مَصَانِعَ لَعَلَّكُمْ تَخْلُدُوْنَ‌ۚ‏ 
26:129. நிரந்தரமாக இருப்பதற்காக வலிமையான கட்டடங்களை உருவாக்குகிறீர்களா?
26:130   وَاِذَا بَطَشْتُمْ بَطَشْتُمْ جَبَّارِيْنَ‌ۚ‏ 
26:130. நீங்கள் பிடிக்கும்போது அடக்குமுறை செய்வோராகப் பிடிக்கிறீர்கள்.
26:131   فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ ۚ‏ 
26:131. எனவே அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:132   وَاتَّقُوْا الَّذِىْۤ اَمَدَّكُمْ بِمَا تَعْلَمُوْنَ‌ۚ‏ 
26:132. உங்களுக்குத் தெரிந்தவற்றின் மூலம் உங்களுக்கு உதவியவனை அஞ்சுங்கள்!
26:133   اَمَدَّكُمْ بِاَنْعَامٍ وَّبَنِيْنَ ‌ۚۙ‏ 
26:134   وَجَنّٰتٍ وَّعُيُوْنٍ‌ۚ‏ 
26:133, 134. கால்நடைகள், மக்கள், நீரூற்றுகள் மற்றும் தோட்டங்கள் மூலம் அவன் உங்களுக்கு உதவினான்.26
26:135   اِنِّىْۤ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍؕ‏ 
26:135. "மகத்தான நாளின்1 வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' (என்றும் கூறினார்.)
26:136   قَالُوْا سَوَآءٌ عَلَيْنَاۤ اَوَعَظْتَ اَمْ لَمْ تَكُنْ مِّنَ الْوٰعِظِيْنَۙ‏ 
26:136. "நீர் அறிவுரை கூறுவதும், கூறாமல் இருப்பதும் எங்களுக்குச் சமமானதே'' என்று அவர்கள் கூறினர்.
26:137   اِنْ هٰذَاۤ اِلَّا خُلُقُ الْاَوَّلِيْنَۙ‏ 
26:137. இது முன்னோர்களின் கட்டுக்கதைகள் தவிர வேறில்லை.
26:138   وَمَا نَحْنُ بِمُعَذَّبِيْنَ‌ۚ‏ 
26:138. நாங்கள் தண்டிக்கப்படுவோரும் அல்லர் (என்றும் கூறினர்.)
26:139   فَكَذَّبُوْهُ فَاَهْلَـكْنٰهُمْ‌ؕ اِنَّ فِىْ ذٰلِكَ لَاَيَةً‌ ؕ وَ مَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏ 
26:139. அவரை அவர்கள் பொய்யரெனக் கருதினர். எனவே அவர்களை அழித்தோம். இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை.
26:140   وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏ 
26:140. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:141   كَذَّبَتْ ثَمُوْدُ الْمُرْسَلِيْنَ‌ ۖ‌ۚ‏ 
26:141. ஸமூது சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.
26:142   اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ صٰلِحٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ 
26:142. அஞ்ச மாட்டீர்களா? என்று அவர்களிடம் அவர்களின் சகோதரர் ஸாலிஹ் கூறியதை நினைவூட்டுவீராக!
26:143   اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏ 
26:143. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.
26:144   فَاتَّقُوْا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ۚ‏ 
26:144. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:145   وَمَاۤ اَسْــَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَؕ‏ 
26:145. இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே இருக்கிறது.
26:146   اَتُتْرَكُوْنَ فِىْ مَا هٰهُنَاۤ اٰمِنِيْنَۙ‏ 
26:147   فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏ 
26:148   وَّزُرُوْعٍ وَّنَخْلٍ طَلْعُهَا هَضِيْمٌ‌ۚ‏ 
26:146, 147, 148. இங்கே நீங்கள் தோட்டங்களிலும், நீரூற்றுகளிலும், விளைநிலங்களிலும், குலை தள்ளிய பேரீச்சை மரங்களிலும், அச்சமற்றோராக விட்டு வைக்கப்படுவீர்களா?26
26:149   وَتَـنْحِتُوْنَ مِنَ الْجِبَالِ بُيُوْتًا فٰرِهِيْنَ‌ۚ‏ 
26:149. மிகத் திறமையுடன் மலைகளை வீடுகளாகக் குடைகிறீர்கள்!
26:150   فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ ۚ‏ 
26:150. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:151   وَلَا تُطِيْعُوْۤا اَمْرَ الْمُسْرِفِيْنَۙ‏ 
26:151. வரம்பு மீறியோரின் கட்டளைகளுக்குக் கட்டுப்படாதீர்கள்!
26:152   الَّذِيْنَ يُفْسِدُوْنَ فِى الْاَرْضِ وَ لَا يُصْلِحُوْنَ‏ 
26:152. அவர்கள் பூமியில் குழப்பம் விளைவிப்பார்கள். சீர் செய்ய மாட்டார்கள் (என்றும் கூறினார்).
26:153   قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَ‌ۚ‏ 
26:153. "நீர் சூனியம் செய்யப்பட்டவராகவே இருக்கிறீர்''285 என்று அவர்கள் கூறினர்.357
26:154   مَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا ‌ ۖۚ فَاْتِ بِاٰيَةٍ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ‏ 
26:154. "நீர் எங்களைப் போன்ற மனிதர் தவிர வேறு இல்லை. நீர் உண்மையாளராக இருந்தால் சான்றைக் கொண்டு வருவீராக!'' (என்றும் கூறினர்)
26:155   قَالَ هٰذِهٖ نَاقَةٌ لَّهَا شِرْبٌ وَّلَـكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُوْمٍ‌ۚ‏ 
26:155. "இதோ ஒட்டகம்! நிர்ணயிக்கப்பட்ட ஒரு நாள் பருகுவது அதற்குரியது. இன்னொரு நாள் உங்களுக்குரியது'' என்றார்.
26:156   وَلَا تَمَسُّوْهَا بِسُوْٓءٍ فَيَاْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيْمٍ‏ 
26:156. அதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! உங்களை மகத்தான நாளின்1 வேதனை பிடித்துக் கொள்ளும் (என்றும் கூறினார்).
26:157   فَعَقَرُوْهَا فَاَصْبَحُوْا نٰدِمِيْنَۙ‏ 
26:157. அதை அவர்கள் அறுத்தனர். இதனால் கைசேதம் அடைந்தனர்.
26:158   فَاَخَذَهُمُ الْعَذَابُ‌ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيَةً‌  ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏ 
26:158. உடனே அவர்களை வேதனை பிடித்துக் கொண்டது. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ளவில்லை.
26:159   وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏ 
26:159. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:160   كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ اۨلْمُرْسَلِيْنَ‌ ۖ ‌ۚ‏ 
26:160. லூத்துடைய சமுதாயத்தினர் தூதர்களைப் பொய்யரெனக் கருதினர்.
26:161   اِذْ قَالَ لَهُمْ اَخُوْهُمْ لُوْطٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ 
26:161. "அஞ்ச மாட்டீர்களா'' என்று அவர்களின் சகோதரர் லூத் அவர்களிடம் கூறியதை நினைவூட்டுவீராக!
26:162   اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏ 
26:162. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.
26:163   فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ۚ‏ 
26:163. எனவே அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:164   وَمَاۤ اَسْــَٔـلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ؕ‏ 
26:164. இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.
26:165   اَتَاْتُوْنَ الذُّكْرَانَ مِنَ الْعٰلَمِيْنَۙ‏ 
26:166   وَ تَذَرُوْنَ مَا خَلَقَ لَـكُمْ رَبُّكُمْ مِّنْ اَزْوَاجِكُمْ‌ؕ بَلْ اَنْـتُمْ قَوْمٌ عٰدُوْنَ‏ 
26:165, 166. உலகில் உங்கள் இறைவன் உங்களுக்காகப் படைத்துள்ள உங்கள் மனைவியரை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கிறீர்களா? இல்லை! நீங்கள் வரம்பு கடந்த கூட்டமாக இருக்கிறீர்கள்! (என்றும் கூறினார்.)26
26:167   قَالُوْا لَٮِٕنْ لَّمْ تَنْتَهِ يٰلُوْطُ لَـتَكُوْنَنَّ مِنَ الْمُخْرَجِيْنَ‏ 
26:167. "லூத்தே நீர் விலகிக் கொள்ளாவிட்டால் வெளியேற்றப்படுவோரில் நீரும் ஒருவர்!'' என்று அவர்கள் கூறினார்கள்.
26:168   قَالَ اِنِّىْ لِعَمَلِكُمْ مِّنَ الْقَالِيْنَؕ‏ 
26:168. "உங்கள் செயலை நான் வெறுப்பவன்'' என்று அவர் கூறினார்.
26:169   رَبِّ نَجِّنِىْ وَاَهْلِىْ مِمَّا يَعْمَلُوْنَ‏ 
26:169. "என் இறைவா! என்னையும், என் குடும்பத்தினரையும் இவர்கள் செய்து கொண்டிருப்பவற்றை விட்டு காப்பாற்றுவாயாக!'' (என்றும் கூறினார்)
26:170   فَنَجَّيْنٰهُ وَ اَهْلَهٗۤ اَجْمَعِيْنَۙ‏ 
26:171   اِلَّا عَجُوْزًا فِى الْغٰبِرِيْنَ‌ۚ‏ 
26:170, 171. எனவே அவரையும், (தீயோருடன்) தங்கி விட்ட கிழவியைத் தவிர, அவரது குடும்பத்தினர் அனைவரையும் காப்பாற்றினோம்.26
26:172   ثُمَّ دَمَّرْنَا الْاٰخَرِيْنَ‌ۚ‏ 
26:172. பின்னர் ஏனையோரை அழித்தோம்.
26:173   وَاَمْطَرْنَا عَلَيْهِمْ مَّطَرًا‌ۚ فَسَآءَ مَطَرُ الْمُنْذَرِيْنَ‏ 
26:173. அவர்கள் மீது (கல்) மழை பொழியச் செய்தோம்.412 எச்சரிக்கப்பட்டோரின் இந்த மழை மிகவும் கெட்டதாக இருந்தது.
26:174   اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً‌  ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏ 
26:174. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.
26:175   وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏ 
26:175. உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:176   كَذَّبَ اَصْحٰبُ لْئَيْكَةِ الْمُرْسَلِيْنَ ‌ۖ‌ۚ‏ 
26:176. தோப்பு (மத்யன்)வாசிகளும் தூதர்களைப் பொய்யர்களெனக் கருதினர்.
26:177   اِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ اَلَا تَتَّقُوْنَ‌ۚ‏ 
26:177. "அஞ்ச மாட்டீர்களா?'' என்று அவர்களிடம் ஷுஐபு கூறியதை நினைவூட்டுவீராக!
26:178   اِنِّىْ لَـكُمْ رَسُوْلٌ اَمِيْنٌۙ‏ 
26:178. நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதராவேன்.
26:179   فَاتَّقُوا اللّٰهَ وَاَطِيْعُوْنِ‌ۚ‏ 
26:179. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்!
26:180   وَمَاۤ اَسْـَٔـــلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ‌ۚ اِنْ اَجْرِىَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ؕ‏ 
26:180. இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலியும் கேட்கவில்லை. எனது கூலி அகிலத்தின் இறைவனிடமே உள்ளது.
26:181   اَوْفُوا الْـكَيْلَ وَلَا تَكُوْنُوْا مِنَ الْمُخْسِرِيْنَ‌ۚ‏ 
26:181. அளவை முழுமைப்படுத்துங்கள்! குறைத்து விடாதீர்கள்!
26:182   وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِ‌ۚ‏ 
26:182. நேர்மையான தராசு மூலம் நிறுத்துக் கொடுங்கள்!
26:183   وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ‌ۚ‏ 
26:183. மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!
26:184   وَاتَّقُوا الَّذِىْ خَلَقَكُمْ وَالْجِـبِلَّةَ الْاَوَّلِيْنَؕ‏ 
26:184. உங்களையும், முந்தைய படைப்புகளையும் படைத்தவனுக்கு அஞ்சுங்கள்! (என்றார்)
26:185   قَالُوْۤا اِنَّمَاۤ اَنْتَ مِنَ الْمُسَحَّرِيْنَۙ‏ 
26:185. "நீர் சூனியம் செய்யப்பட்டவர் தான்''285 என்று அவர்கள் கூறினர்.367
26:186   وَمَاۤ اَنْتَ اِلَّا بَشَرٌ مِّثْلُـنَا وَ اِنْ نَّظُنُّكَ لَمِنَ الْكٰذِبِيْنَ‌ۚ‏ 
26:186. "நீர் எங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. உம்மைப் பொய்யராகவே கருதுகிறோம்.''
26:187   فَاَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ السَّمَآءِ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَؕ‏ 
26:187. "நீர் உண்மையாளராக இருந்தால் வானத்தின்507 ஒரு துண்டை எங்கள் மீது விழச் செய்வீராக!'' (என்றும் கூறினர்)
26:188   قَالَ رَبِّىْۤ اَعْلَمُ بِمَا تَعْمَلُوْنَ‏ 
26:188. "நீங்கள் செய்பவற்றை என் இறைவன் நன்கறிபவன்'' என்று அவர் கூறினார்.
26:189   فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمْ عَذَابُ يَوْمِ الظُّلَّةِ‌ؕ اِنَّهٗ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيْمٍ‏ 
26:189. அவரைப் பொய்யரெனக் கருதினர். எனவே (மேகத்தால்) நிழலிடப்பட்ட நாளின் வேதனை அவர்களைத் தாக்கியது. அது மகத்தான நாளின் வேதனையாக இருந்தது.
26:190   اِنَّ فِىْ ذٰ لِكَ لَاَيَةً ‌ ؕ وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِيْنَ‏ 
26:190. இதில் தக்க சான்று இருக்கிறது. அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வோராக இல்லை.
26:191   وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيْزُ الرَّحِيْمُ‏ 
26:191. (முஹம்மதே!) உமது இறைவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
26:192   وَاِنَّهٗ لَـتَنْزِيْلُ رَبِّ الْعٰلَمِيْنَؕ‏ 
26:192. இது அகிலத்தின் இறைவனால் அருளப்பட்டது.
26:193   نَزَلَ بِهِ الرُّوْحُ الْاَمِيْنُۙ‏ 
26:194   عَلٰى قَلْبِكَ لِتَكُوْنَ مِنَ الْمُنْذِرِيْنَۙ‏ 
26:195   بِلِسَانٍ عَرَبِىٍّ مُّبِيْنٍؕ‏ 
26:193, 194, 195. எச்சரிக்கை செய்வோரில் (முஹம்மதே) நீர் ஆவதற்காக, உமது உள்ளத்தில்152 தெளிவான அரபு489 மொழியில்227 நம்பிக்கைக்குரிய ரூஹ்444 இதை இறக்கினார்.26& 492
26:196   وَاِنَّهٗ لَفِىْ زُبُرِ الْاَوَّلِيْنَ‏ 
26:196. இது முன்னோரின் வேதங்களிலும் உள்ளது.
26:197   اَوَلَمْ يَكُنْ لَّهُمْ اٰيَةً اَنْ يَّعْلَمَهٗ عُلَمٰٓؤُا بَنِىْۤ اِسْرَآءِيْلَؕ‏ 
26:197. இஸ்ராயீலின் மக்களில் உள்ள அறிஞர்கள் இதை அறிந்து (ஏற்று) இருப்பது இவர்களுக்குச் சான்றாக இல்லையா?
26:198   وَلَوْ نَزَّلْنٰهُ عَلٰى بَعْضِ الْاَعْجَمِيْنَۙ‏ 
26:199   فَقَرَاَهٗ عَلَيْهِمْ مَّا كَانُوْا بِهٖ مُؤْمِنِيْنَؕ‏ 
26:198, 199. இதை அரபியர் அல்லாத ஒருவருக்கு அருளி, அவர் இவர்களுக்கு அதை ஓதிக் காட்டியிருந்தாலும், அதை நம்பியிருக்க மாட்டார்கள்.26
26:200   كَذٰلِكَ سَلَكْنٰهُ فِىْ قُلُوْبِ الْمُجْرِمِيْنَؕ‏ 
26:200. இவ்வாறே குற்றவாளிகளின் உள்ளங்களில் இதைப் புகுத்தி விட்டோம்.
26:201   لَا يُؤْمِنُوْنَ بِهٖ حَتّٰى يَرَوُا الْعَذَابَ الْاَلِيْمَۙ‏ 
26:201. துன்புறுத்தும் வேதனையை அவர்கள் காணாத வரை அதை நம்ப மாட்டார்கள்.
26:202   فَيَاْتِيَهُمْ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَۙ‏ 
26:202. அவர்கள் அறியாத நிலையில் திடீரென்று அவர்களிடம் அது வந்து விடும்.
26:203   فَيَـقُوْلُوْا هَلْ نَحْنُ مُنْظَرُوْنَؕ‏ 
26:203. "எங்களுக்கு அவகாசம் அளிக்கப்படுமா?'' என்று (அப்போது) அவர்கள் கேட்பார்கள்.
26:204   اَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُوْنَ‏ 
26:204. நமது வேதனையையா அவர்கள் அவசரமாகத் தேடுகின்றனர்?
26:205   اَفَرَءَيْتَ اِنْ مَّتَّعْنٰهُمْ سِنِيْنَۙ‏ 
26:206   ثُمَّ جَآءَهُمْ مَّا كَانُوْا يُوْعَدُوْنَۙ‏ 
26:207   مَاۤ اَغْنٰى عَنْهُمْ مَّا كَانُوْا يُمَتَّعُوْنَؕ‏ 
26:205, 206, 207. அவர்களைப் பல வருடங்கள் நாம் சுகம் அனுபவிக்கச் செய்து, பின்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டது அவர்களிடம் வருமானால் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தவை அவர்களைக் காப்பாற்றாது என்பதை அறிவீரா?26
26:208   وَمَاۤ اَهْلَكْنَا مِنْ قَرْيَةٍ اِلَّا لَهَا مُنْذِرُوْنَ‌‌‌‌‌ ۛ ‌ۖ ‏ 
s
26:208. எச்சரிக்கை செய்வோரில்லாமல் எந்த ஊரையும் நாம் அழித்ததில்லை.
26:209   ذِكْرٰى‌ۛ وَمَا كُنَّا ظٰلِمِيْنَ‏ 
26:209. (இது) அறிவுரை! நாம் அநீதி இழைத்ததில்லை.
26:210   وَمَا تَنَزَّلَتْ بِهِ الشَّيٰطِيْنُ‏ 
26:210. இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை.
26:211   وَمَا يَنْۢبَغِىْ لَهُمْ وَمَا يَسْتَطِيْعُوْنَؕ‏ 
26:211. அது அவர்களுக்குத் தகுதியானதும் அல்ல. அதற்கு அவர்களால் இயலாது.
26:212   اِنَّهُمْ عَنِ السَّمْعِ لَمَعْزُوْلُوْنَؕ‏ 
26:212. அவர்கள் செவியேற்பதை விட்டும் தடுக்கப்பட்டவராவர்.307
26:213   فَلَا تَدْعُ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتَكُوْنَ مِنَ الْمُعَذَّبِيْنَ‌ۚ‏ 
26:213. அல்லாஹ்வுடன் மற்றொரு கடவுளை நீர் அழைக்காதீர்! அப்போது நீர் தண்டிக்கப்படுபவராக ஆகி விடுவீர்!
26:214   وَاَنْذِرْ عَشِيْرَتَكَ الْاَقْرَبِيْنَۙ‏ 
26:214. (முஹம்மதே!) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!281
26:215   وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏ 
26:215. உம்மைப் பின்பற்றிய நம்பிக்கை கொண்டோருக்கு உமது சிறகைத் தாழ்த்துவீராக!251
26:216   فَاِنْ عَصَوْكَ فَقُلْ اِنِّىْ بَرِىْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ‌ۚ‏ 
26:216. "அவர்கள் உமக்கு மாறுசெய்தால் நீங்கள் செய்பவற்றை விட்டு நான் விலகியவன்'' என்று கூறுவீராக!
26:217   وَتَوَكَّلْ عَلَى الْعَزِيْزِ الرَّحِيْمِۙ‏ 
26:217. மிகைத்தவனையும், நிகரற்ற அன்புடையோனையுமே சார்ந்திருப்பீராக!
26:218   الَّذِىْ يَرٰٮكَ حِيْنَ تَقُوْمُۙ‏ 
26:219   وَتَقَلُّبَكَ فِى السّٰجِدِيْنَ‏ 
26:218, 219. நீர் நிற்கும் நேரத்திலும், ஸஜ்தாச் செய்வோருடன் நீர் இயங்கும்போதும் அவன் உம்மைப் பார்க்கிறான்.26
26:220   اِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏ 
26:220. அவனே செவியுறுபவன்;488 அறிந்தவன்.
26:221   هَلْ اُنَبِّئُكُمْ عَلٰى مَنْ تَنَزَّلُ الشَّيٰـطِيْنُؕ‏ 
26:221. ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
26:222   تَنَزَّلُ عَلٰى كُلِّ اَفَّاكٍ اَثِيْمٍۙ‏ 
26:222. இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர்.
26:223   يُّلْقُوْنَ السَّمْعَ وَاَكْثَرُهُمْ كٰذِبُوْنَؕ‏ 
26:223. அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள்.
26:224   وَالشُّعَرَآءُ يَتَّبِعُهُمُ الْغَاوٗنَؕ‏ 
26:224. கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள்.
26:225   اَلَمْ تَرَ اَنَّهُمْ فِىْ كُلِّ وَادٍ يَّهِيْمُوْنَۙ‏ 
26:225. அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா?
26:226   وَاَنَّهُمْ يَقُوْلُوْنَ مَا لَا يَفْعَلُوْنَۙ‏ 
26:226. அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர்.
26:227   اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَذَكَرُوا اللّٰهَ كَثِيْرًا وَّانْتَصَرُوْا مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا‌ ؕ وَسَيَـعْلَمُ الَّذِيْنَ ظَلَمُوْۤا اَىَّ مُنْقَلَبٍ يَّـنْقَلِبُوْنَ‏ 
26:227. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து அல்லாஹ்வை அதிகம் நினைத்து, அநீதி இழைக்கப்பட்ட பின் பழிதீர்த்துக் கொண்ட(புல)வர்களைத் தவிர. எந்த இடத்திற்குத் தாங்கள் செல்லவிருக்கிறோம் என்பதை அநீதி இழைத்தோர் பின்னர் அறிந்து கொள்வார்கள்.

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 294690