23. குரங்குகளாக மாற்றப்பட்டது ஏன்?

 

சனிக்கிழமை மீன்பிடிக்கக் கூடாது என்ற கட்டளையை மீறியவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர் என்று இவ்வசனங்கள் (2:65, 5:60, 7:166) கூறுகின்றன.

 

மீன் பிடித்தது குரங்குகளாக மாற்றும் அளவுக்குப் பெரும் குற்றமா? என்று சந்தேகம் எழக்கூடும். இதற்கான விளக்கத்தை 146வது குறிப்பில் காணலாம் இன்றைய குரங்குகளுக்கும், அவர்களுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ? என்று சிலர் நினைக்கலாம்.

 

யாரை அல்லாஹ் உருமாற்றி விட்டானோ அவர்களுக்குச் சந்ததிகளை ஏற்படுத்த மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். நூல்: முஸ்லிம் 5176, 5177

 

எனவே குரங்குகளாக மாற்றப்பட்ட அவர்கள் இனப்பெருக்கம் செய்யாமல் மரணித்து விட்டார்கள் என்பதுதான் சரியான கருத்து.

 

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.