209. கொலைக்குரிய இழப்பீட்டின் அளவு

 

தவறுதலாக ஒருவன் இன்னொருவனைக் கொன்று விட்டால் அதற்கான இழப்பீடு அளிக்கப்பட வேண்டும் என்று இவ்வசனம் (4:92) கூறுகிறது. இழப்பீட்டின் அளவு திருக்குர்ஆனில் கூறப்படவில்லை.

 

தவறுதலாக ஒருவர் இன்னொருவரைக் கொன்று விட்டால் நூறு ஒட்டகங்கள், அல்லது இரு நூறு மாடுகள், அல்லது இரண்டாயிரம் ஆடுகள் இழப்பீடாக அளிக்கப்பட வேண்டுமென்றும், இந்த இழப்பீடு கொலை செய்தவனின் அனைத்து வாரிசுகளிடமிருந்தும் கூட்டாக வசூலிக்கப்பட வேண்டும் என்றும், வசூலிக்கப்படும் இழப்பீட்டை கொல்லப்பட்டவனின் வாரிசுகள் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டப்படி பிரித்துக் கொள்ள வேண்டுமென்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.

(பார்க்க: நஸாயீ 4719)

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © tamilquran.in.