Tamil Quran -அஷ்ஷம்ஸ் - சூரியன் -அத்தியாயம் :91-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
91. அஷ்ஷம்ஸ்
சூரியன்
மொத்த வசனங்கள் : 15
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஷ்ஷம்ஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
91:1 وَالشَّمْسِ وَضُحٰٮهَا ۙ
91:1. சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்தியமாக!
379
91:2 وَالْقَمَرِ اِذَا تَلٰٮهَا ۙ
91:2. அதை அடுத்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக!
379
91:3 وَالنَّهَارِ اِذَا جَلّٰٮهَا ۙ
91:3. அதை (சூரியனை) வெளிப்படுத்தும் பகலின் மீது சத்தியமாக!
379
91:4 وَالَّيْلِ اِذَا يَغْشٰٮهَا ۙ
91:4. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!
379
91:5 وَالسَّمَآءِ وَمَا بَنٰٮهَا ۙ
91:5. வானத்தின்507 மீதும், அதன் அமைப்பின் மீதும் சத்தியமாக!
379
91:6 وَالْاَرْضِ وَمَا طَحٰٮهَا ۙ
91:6. பூமியின் மீதும், அது விரிக்கப்பட்டதன் மீதும் சத்தியமாக!
379
91:7 وَنَفْسٍ وَّمَا سَوّٰٮهَا ۙ
91:7. உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!
379
91:8 فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰٮهَا ۙ
91:8. அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.
91:9 قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰٮهَا ۙ
91:9. அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.
91:10 وَقَدْ خَابَ مَنْ دَسّٰٮهَا ؕ
91:10. அதைக் களங்கப்படுத்தியவர் நட்டமடைந்தார்.
91:11 كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰٮهَآ ۙ
91:11. ஸமூது சமுதாயத்தினர் தமது வரம்பு மீறுதல் காரணமாக பொய்யெனக் கருதினர்.
91:12 اِذِ انْۢبَعَثَ اَشْقٰٮهَا ۙ
91:12. அப்போது அதில் மிகவும் துர்பாக்கியசாலி முன்வந்தான்.
91:13 فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْيٰهَا ؕ
91:13. "இது அல்லாஹ்வின் ஒட்டகம். அதை நீரருந்த விடுங்கள்!'' என்று அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (சாலிஹ்) கூறினார்.
91:14 فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَا ۙفَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰٮهَا ۙ
91:14. அவரைப் பொய்யெனக் கருதினர். அதன் கால் நரம்பைத் துண்டித்தனர். அவர்களின் பாவம் காரணமாக அவர்களுக்கு வேதனையை இறக்கி அவர்களை அவர்களின் இறைவன் தரைமட்டமாக்கினான்.
91:15 وَلَا يَخَافُ عُقْبٰهَا
91:15. அதன் முடிவைப் பற்றி அவன் அஞ்சவில்லை.