Tamil Quran தமிழ் குர்ஆன் -அல் ஹுமஸா- புறம் பேசுதல் -அத்தியாயம் :104-www.tamilquran.in-மொழிபெயர்ப்பு :பீ.ஜைனுல் ஆபிதீன்
104. அல் ஹுமஸா
புறம் பேசுதல்
மொத்த வசனங்கள் : 9
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஹுமஸா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
104:1 وَيْلٌ لِّـكُلِّ هُمَزَةٍ لُّمَزَةِ ۙ
104:1. குறை கூறிப் புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.
104:2 اۨلَّذِىْ جَمَعَ مَالًا وَّعَدَّدَهٗ ۙ
104:2. அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான்.
104:3 يَحْسَبُ اَنَّ مَالَهٗۤ اَخْلَدَهٗ ۚ
104:3. தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான்.
104:4 كَلَّا لَيُنْۢبَذَنَّ فِى الْحُطَمَةِ ۖ
104:4. அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான்.
104:5 وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْحُطَمَةُ ؕ
104:5. ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
104:6 نَارُ اللّٰهِ الْمُوْقَدَةُ ۙ
104:6. மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு
104:7 الَّتِىْ تَطَّلِعُ عَلَى الْاَفْـــِٕدَةِ ؕ
104:7. அது உள்ளங்களைச் சென்றடையும்.
104:8 اِنَّهَا عَلَيْهِمْ مُّؤْصَدَةٌ ۙ
104:9 فِىْ عَمَدٍ مُّمَدَّدَةٍ
104:8, 9. நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.
26