32.    அஸ்ஸஜ்தா

சிரம் பணிதல்

மொத்த வசனங்கள் : 30

இறைவனுக்காக ஸஜ்தாச் செய்வோர் பற்றியும் அவர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள் பற்றியும் 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

32:1   الٓمّٓ‏ 
32:1. அலிஃப், லாம், மீம்.2
32:2   ۚ تَنْزِيْلُ الْكِتٰبِ لَا رَيْبَ فِيْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِيْنَؕ‏ 
32:2. (இது) அகிலத்தின் இறைவனிடமிருந்து அருளப்பட்ட வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
32:3   اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰٮهُ‌ۚ بَلْ هُوَ الْحَقُّ مِنْ رَّبِّكَ لِتُنْذِرَ قَوْمًا مَّاۤ اَتٰٮهُمْ مِّنْ نَّذِيْرٍ مِّنْ قَبْلِكَ لَعَلَّهُمْ يَهْتَدُوْنَ‏ 
32:3. "இதை இவர் இட்டுக்கட்டி விட்டார்'' என்று அவர்கள் கூறுகிறார்களா? அவ்வாறில்லை! உமக்கு முன்னர் எச்சரிப்பவர் வராத சமுதாயத்தை (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும், அவர்கள் நேர்வழி பெறுவதற்காகவும் (இது) உம் இறைவனிடமிருந்து உமக்கு வந்த உண்மை.
32:4   اَللّٰهُ الَّذِىْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ وَمَا بَيْنَهُمَا فِىْ سِتَّةِ اَيَّامٍ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ‌ؕ مَا لَكُمْ مِّنْ دُوْنِهٖ مِنْ وَّلِىٍّ وَّلَا شَفِيْعٍ‌ؕ اَفَلَا تَتَذَكَّرُوْنَ‏ 
32:4. வானங்களையும்,507 பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் அல்லாஹ்வே ஆறு நாட்களில் படைத்தான்.179 பின்னர் அர்ஷின்488 மீது அமர்ந்தான்.511 உங்களுக்கு அவனன்றி பொறுப்பாளரோ, பரிந்துரைப்பவரோ17 இல்லை. நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
32:5   يُدَبِّرُ الْاَمْرَ مِنَ السَّمَآءِ اِلَى الْاَرْضِ ثُمَّ يَعْرُجُ اِلَيْهِ فِىْ يَوْمٍ كَانَ مِقْدَارُهٗۤ اَلْفَ سَنَةٍ مِّمَّا تَعُدُّوْنَ‏ 
32:5. வானத்திலிருந்து507 பூமி வரை காரியங்களை அவனே நிர்வகிக்கிறான். அது ஒரு நாளில் அவனிடம் மேலேறிச் செல்லும். அது நீங்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்கள் அளவுடையது.293
32:6   ذٰلِكَ عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْعَزِيْزُ الرَّحِيْمُۙ‏ 
32:6. அவன் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.
32:7   الَّذِىْۤ اَحْسَنَ كُلَّ شَىْءٍ خَلَقَهٗ‌ وَبَدَاَ خَلْقَ الْاِنْسَانِ مِنْ طِيْنٍ‌ۚ‏ 
32:7. அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக்368 களிமண்ணிலிருந்து503 துவக்கினான்.506
32:8   ثُمَّ جَعَلَ نَسْلَهٗ مِنْ سُلٰلَةٍ مِّنْ مَّآءٍ مَّهِيْنٍ‌ۚ‏ 
32:8. பிறகு அவனது சந்ததிகளை அற்பமான நீரின்506 சத்திலிருந்து உருவாக்கினான்.
32:9   ثُمَّ سَوّٰٮهُ وَنَفَخَ فِيْهِ مِنْ رُّوْحِهٖ‌ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَالْاَفْـــِٕدَةَ ‌ ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏ 
32:9. பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.
32:10   وَقَالُوْٓا ءَاِذَا ضَلَلْنَا فِى الْاَرْضِ ءَاِنَّا لَفِىْ خَلْقٍ جَدِيْدٍ ؕ ‌بَلْ هُمْ بِلِقَآءِ رَبِّهِمْ كٰفِرُوْنَ‏ 
32:10. "பூமிக்குள் மறைந்த பின் புதுப்படைப்பை நாங்கள் பெறுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். உண்மையில் அவர்கள் தமது இறைவனின் சந்திப்பை488 மறுக்கின்றனர்.
32:11   قُلْ يَتَوَفّٰٮكُمْ مَّلَكُ الْمَوْتِ الَّذِىْ وُكِّلَ بِكُمْ ثُمَّ اِلٰى رَبِّكُمْ تُرْجَعُوْنَ‏ 
32:11. "உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார்.165 பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்'' என்று கூறுவீராக!
32:12   وَلَوْ تَرٰٓى اِذِ الْمُجْرِمُوْنَ نَاكِسُوْا رُءُوْسِهِمْ عِنْدَ رَبِّهِمْ رَبَّنَاۤ اَبْصَرْنَا وَسَمِعْنَا فَارْجِعْنَا نَعْمَلْ صَالِحًـا اِنَّا مُوْقِنُوْنَ‏ 
32:12. குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலை குனிந்து, "எங்கள் இறைவா! பார்த்து விட்டோம். கேட்டு விட்டோம். எனவே எங்களைத் திருப்பி அனுப்பு! நல்லறம் செய்கிறோம். நாங்கள் உறுதியாக நம்பிக்கை கொள்வோம்'' என்று கூறுவதை நீர் காண வேண்டுமே!
32:13   وَ لَوْ شِئْنَا لَاٰتَيْنَا كُلَّ نَفْسٍ هُدٰٮهَا وَلٰـكِنْ حَقَّ الْقَوْلُ مِنِّىْ لَاَمْلَئَنَّ جَهَنَّمَ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ اَجْمَعِيْنَ‏ 
32:13. நாம் நினைத்திருந்தால் ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான நேர்வழியைக் கொடுத்திருப்போம். மாறாக "அனைத்து (கெட்ட) மனிதர்களாலும், ஜின்களாலும் நரகத்தை நிரப்புவேன்'' என்று என்னிடமிருந்து சொல் முந்தி விட்டது.
32:14   فَذُوْقُوْا بِمَا نَسِيْتُمْ لِقَآءَ يَوْمِكُمْ هٰذَا‌ ۚ اِنَّا نَسِيْنٰكُمْ‌ وَذُوْقُوْا عَذَابَ الْخُلْدِ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏ 
32:14. "இந்த நாளின்1 சந்திப்பை நீங்கள் மறந்ததால் அனுபவியுங்கள்! நாமும் உங்களை மறந்து விட்டோம்.6 எனவே நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக நிரந்தரமான வேதனையைச் சுவையுங்கள்!'' (என்று கூறப்படும்.)
32:15   اِنَّمَا يُؤْمِنُ بِاٰيٰتِنَا الَّذِيْنَ اِذَا ذُكِّرُوْا بِهَا خَرُّوْا سُجَّدًا وَّسَبَّحُوْا بِحَمْدِ رَبِّهِمْ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ۩‏ 
32:15. நமது வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்படும்போது ஸஜ்தாவில்396 விழுவோரும், தமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவோரும், பெருமையடிக்காமல் இருப்போருமே அவற்றை நம்புபவர்கள்.
32:16   تَتَجَافٰى جُنُوْبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُوْنَ رَبَّهُمْ خَوْفًا وَّطَمَعًا وَّمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَ‏ 
32:16. அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்.
32:17   فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّاۤ اُخْفِىَ لَهُمْ مِّنْ قُرَّةِ اَعْيُنٍ‌ۚ جَزَآءًۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 
32:17. அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக அவர்களுக்காக கண்குளிரும் வகையில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.
32:18   اَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا‌ ؕ لَا يَسْتَوٗنَؔ‏ 
32:18. நம்பிக்கை கொண்டவர் குற்றம் செய்தவரைப் போல் ஆவாரா? அவர்கள் சமமாக மாட்டார்கள்.
32:19   اَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمْ جَنّٰتُ الْمَاْوٰى نُزُلًاۢ بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ‏ 
32:19. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு அவர்கள் (நன்மை) செய்து கொண்டிருந்ததால் தங்குமிடமாக சொர்க்கச் சோலைகள் பரிசாகவுள்ளன.
32:20   وَاَمَّا الَّذِيْنَ فَسَقُوْا فَمَاْوٰٮهُمُ النَّارُ‌ؕ كُلَّمَاۤ اَرَادُوْۤا اَنْ يَّخْرُجُوْا مِنْهَاۤ اُعِيْدُوْا فِيْهَا وَ قِيْلَ لَهُمْ ذُوْقُوْا عَذَابَ النَّارِ الَّذِىْ كُنْتُمْ بِهٖ تُكَذِّبُوْنَ‏ 
32:20. குற்றம் புரிந்தோரின் தங்குமிடம் நரகம். அங்கிருந்து அவர்கள் வெளியேற நினைக்கும் போதெல்லாம் மீண்டும் அதில் போடப்படுவார்கள். "நீங்கள் பொய்யெனக் கருதிக் கொண்டிருந்த நரகத்தின் வேதனையைச் சுவையுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறப்படும்.
32:21   وَلَنـــُذِيْقَنَّهُمْ مِّنَ الْعَذَابِ الْاَدْنٰى دُوْنَ الْعَذَابِ الْاَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏ 
32:21. அவர்கள் திருந்துவதற்காக இப்பெரிய வேதனைக்கு முன்னர் (இவ்வுலகில்) சிறிய வேதனையை அவர்களுக்குச் சுவைக்கச் செய்கிறோம்.
32:22   وَمَنْ اَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِاٰيٰتِ رَبِّهٖ ثُمَّ اَعْرَضَ عَنْهَا ‌ؕ اِنَّا مِنَ الْمُجْرِمِيْنَ مُنْتَقِمُوْنَ‏ 
32:22. தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு அதைப் புறக்கணித்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? நாம் குற்றவாளிகளைத் தண்டிப்போம்.
32:23   وَلَقَدْ اٰتَيْنَا مُوْسَى الْكِتٰبَ فَلَا تَكُنْ فِىْ مِرْيَةٍ مِّنْ لِّقَآٮِٕهٖ‌ وَجَعَلْنٰهُ هُدًى لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَۚ‏ 
32:23. மூஸாவுக்கு வேதத்தை வழங்கினோம். (முஹம்மதே!) அவரைச் சந்தித்ததில்267 நீர் சந்தேகம் கொள்ளாதீர்.315 அவரை இஸ்ராயீலின் மக்களுக்கு வழி காட்டியாக்கினோம்.
32:24   وَ جَعَلْنَا مِنْهُمْ اَٮِٕمَّةً يَّهْدُوْنَ بِاَمْرِنَا لَمَّا صَبَرُوْا‌ ؕ وَ كَانُوْا بِاٰيٰتِنَا يُوْقِنُوْنَ‏ 
32:24. அவர்கள் பொறுமையைக் கடைப்பிடித்து நமது வசனங்களை உறுதியாக நம்பியபோது நமது கட்டளைப்படி வழிகாட்டும் தலைவர்களை அவர்களிலிருந்து ஏற்படுத்தினோம்.
32:25   اِنَّ رَبَّكَ هُوَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ‏ 
32:25. அவர்கள் முரண்பட்ட விஷயத்தில் கியாமத் நாளில்1 உமது இறைவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான்.
32:26   اَوَلَمْ يَهْدِ لَهُمْ كَمْ اَهْلَكْنَا مِنْ قَبْلِهِمْ مِّنَ الْقُرُوْنِ يَمْشُوْنَ فِىْ مَسٰكِنِهِمْ‌ ؕ اِنَّ فِىْ ذٰ لِكَ لَاٰيٰتٍ ؕ اَفَلَا يَسْمَعُوْنَ‏ 
32:26. இவர்களுக்கு முன் பல தலைமுறையினரை நாம் அழித்திருப்பது இவர்களுக்கு நேர்வழி காட்டவில்லையா? அவர்களின் குடியிருப்புக்களில் இவர்கள் நடந்து செல்கின்றனர். இதில் பல சான்றுகள் உள்ளன. அவர்கள் செவியுற மாட்டார்களா?
32:27   اَوَلَمْ يَرَوْا اَنَّا نَسُوْقُ الْمَآءَ اِلَى الْاَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهٖ زَرْعًا تَاْكُلُ مِنْهُ اَنْعَامُهُمْ وَاَنْفُسُهُمْ‌ؕ اَفَلَا يُبْصِرُوْنَ‏ 
32:27. "வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்'' என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?
32:28   وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْفَتْحُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ 
32:28. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்தத் தீர்ப்பு எப்போது?'' என்று அவர்கள் கேட்கின்றனர்.
>
32:29   قُلْ يَوْمَ الْفَتْحِ لَا يَنْفَعُ الَّذِيْنَ كَفَرُوْۤا اِيْمَانُهُمْ وَلَا هُمْ يُنْظَرُوْنَ‏ 
32:29. "தீர்ப்பு நாளில்1 (ஏகஇறைவனை) மறுத்தோருக்கு அவர்கள் நம்பிக்கை கொள்வது பயன் தராது. அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்'' என்று கூறுவீராக!
32:30   فَاَعْرِضْ عَنْهُمْ وَانْتَظِرْ اِنَّهُمْ مُّنْتَظِرُوْنَ‏ 
32:30. அவர்களைப் புறக்கணிப்பீராக! எதிர்பார்ப்பீராக! அவர்களும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 269958