81.   அத்தக்வீர்

சுருட்டுதல்

மொத்த வசனங்கள் : 29

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் சூரியன் சுருட்டப்படும் எனக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

81:1   اِذَا الشَّمْسُ كُوِّرَتْۙ‏ 
81:1. சூரியன் சுருட்டப்படும்போது,
81:2   وَاِذَا النُّجُوْمُ انْكَدَرَتْۙ‏ 
81:2. நட்சத்திரங்கள் உதிரும்போது,
81:3   وَاِذَا الْجِبَالُ سُيِّرَتْۙ‏ 
81:3. மலைகள் பெயர்க்கப்படும்போது,
81:4   وَاِذَا الْعِشَارُ عُطِّلَتْۙ‏ 
81:4. கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும்போது,
81:5   وَاِذَا الْوُحُوْشُ حُشِرَتْۙ‏ 
81:5. விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது,
81:6   وَاِذَا الْبِحَارُ سُجِّرَتْۙ‏ 
81:6. கடல்கள் தீ மூட்டப்படும்போது,
81:7   وَاِذَا النُّفُوْسُ زُوِّجَتْۙ‏ 
81:7. உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும்போது,
81:8   وَاِذَا الْمَوْءٗدَةُ سُٮِٕلَتْۙ‏ 
81:9   بِاَىِّ ذَنْۢبٍ قُتِلَتْ‌ۚ‏ 
81:8, 9. என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள்487 விசாரிக்கப்படும்போது,26
81:10   وَاِذَا الصُّحُفُ نُشِرَتْۙ‏ 
81:10. ஏடுகள் விரிக்கப்படும்போது,
81:11   وَاِذَا السَّمَآءُ كُشِطَتْۙ‏ 
81:11. வானம்507 அகற்றப்படும்போது,
81:12   وَاِذَا الْجَحِيْمُ سُعِّرَتْۙ‏ 
81:12. நரகம் கொளுத்தப்படும்போது,
81:13   وَاِذَا الْجَـنَّةُ اُزْلِفَتْۙ‏ 
81:13. சொர்க்கம் அருகே கொண்டு வரப்படும்போது,
81:14   عَلِمَتْ نَفْسٌ مَّاۤ اَحْضَرَتْؕ‏ 
81:14. ஒருவன், தான் முற்படுத்தியதை அறிந்து கொள்வான்.
81:15   فَلَاۤ اُقْسِمُ بِالْخُنَّسِۙ‏ 
81:16   الْجَوَارِ الْكُنَّسِۙ‏ 
81:15, 16. மறைந்தும் மறையாமலிருக்கிற, (முழுதும்) மறைகின்ற நட்சத்திரங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.26
81:17   وَالَّيْلِ اِذَا عَسْعَسَۙ‏ 
81:17. பின்னோக்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக379
81:18   وَالصُّبْحِ اِذَا تَنَفَّسَۙ‏ 
81:18. தெளிவாகும் காலைப் பொழுதின் மீது சத்தியமாக!379
81:19   اِنَّهٗ لَقَوْلُ رَسُوْلٍ كَرِيْمٍۙ‏ 
81:19. இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும்.492
81:20   ذِىْ قُوَّةٍ عِنْدَ ذِى الْعَرْشِ مَكِيْنٍۙ‏ 
81:20. (அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு488 உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்.
81:21   مُّطَاعٍ ثَمَّ اَمِيْنٍؕ‏ 
81:21. வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.
81:22   وَ مَا صَاحِبُكُمْ بِمَجْنُوْنٍ‌ۚ‏ 
81:22. உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர்.468
81:23   وَلَقَدْ رَاٰهُ بِالْاُفُقِ الْمُبِيْنِ‌ۚ‏ 
81:23. அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார்.
81:24   وَمَا هُوَ عَلَى الْغَيْبِ بِضَنِيْنٍ‌ۚ‏ 
81:24. அவர் (முஹம்மது) மறைவானவற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர்.
81:25   وَمَا هُوَ بِقَوْلِ شَيْطٰنٍ رَّجِيْمٍۙ‏ 
81:25. இது விரட்டப்பட்ட ஷைத்தானின் கூற்று அல்ல.
81:26   فَاَيْنَ تَذْهَبُوْنَؕ‏ 
81:26. எங்கே செல்கிறீர்கள்?
81:27   اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَۙ‏ 
81:28   لِمَنْ شَآءَ مِنْكُمْ اَنْ يَّسْتَقِيْمَؕ‏ 
81:27, 28. இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை.26
81:29   وَمَا تَشَآءُوْنَ اِلَّاۤ اَنْ يَّشَآءَ اللّٰهُ رَبُّ الْعٰلَمِيْنَ‏ 
<
81:29. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை.289

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 44592