85.   அல்புரூஜ்

நட்சத்திரங்கள்

மொத்த வசனங்கள் : 22

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் புரூஜ் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

85:1   وَالسَّمَآءِ ذَاتِ الْبُرُوْجِۙ‏ 
85:1. நட்சத்திரங்களுடைய வானத்தின்507 மீது சத்தியமாக!379
85:2   وَالْيَوْمِ الْمَوْعُوْدِۙ‏ 
85:2. வாக்களிக்கப்பட்ட நாள்1 மீது சத்தியமாக!379
85:3   وَشَاهِدٍ وَّمَشْهُوْدٍؕ‏ 
85:3. சாட்சி கூறுவோர் மீதும், சாட்சி கூறப்படுவோர் மீதும் சத்தியமாக!379
85:4   قُتِلَ اَصْحٰبُ الْاُخْدُوْدِۙ‏ 
85:5   النَّارِ ذَاتِ الْوَقُوْدِۙ‏ 
85:4,5. எரிபொருள் நிரப்பிய நெருப்புக் குண்டத்தைத் தயாரித்தவர்கள்469 சபிக்கப்பட்டு விட்டனர்.26
85:6   اِذْ هُمْ عَلَيْهَا قُعُوْدٌ ۙ‏ 
85:7   وَّهُمْ عَلٰى مَا يَفْعَلُوْنَ بِالْمُؤْمِنِيْنَ شُهُوْدٌ ؕ‏ 
85:6,7. அவர்கள் அதனருகே அமர்ந்திருந்தபோது நம்பிக்கை கொண்டோரை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.26
85:8   وَمَا نَقَمُوْا مِنْهُمْ اِلَّاۤ اَنْ يُّؤْمِنُوْا بِاللّٰهِ الْعَزِيْزِ الْحَمِيْدِۙ‏ 
85:8. "புகழுக்குரியவனும், மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பினார்கள்'' என்பதற்காகவே தவிர அவர்களை இவர்கள் பழி வாங்கவில்லை.
85:9   الَّذِىْ لَهٗ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ؕ وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىْءٍ شَهِيْدٌ ؕ‏ 
85:9. வானங்கள் 507 மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது. அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்.
85:10   اِنَّ الَّذِيْنَ فَتَـنُوا الْمُؤْمِنِيْنَ وَ الْمُؤْمِنٰتِ ثُمَّ لَمْ يَتُوْبُوْا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيْقِؕ‏ 
85:10. நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் துன்புறுத்தி விட்டு பின்னர் பாவமன்னிப்புக் கோராதவர்களுக்கு நரகத்தின் வேதனை இருக்கிறது. பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
85:11   اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ جَنّٰتٌ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕؔ ذٰلِكَ الْفَوْزُ الْكَبِيْرُؕ‏ 
85:11. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இதுவே பெரும் வெற்றி.
85:12   اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ ؕ‏ 
85:12. உமது இறைவனின் பிடி கடுமையானது.
85:13   اِنَّهٗ هُوَ يُبْدِئُ وَيُعِيْدُ‌ ۚ‏ 
85:13. அவன் முதலில் படைக்கிறான். மீண்டும் படைக்கிறான்.
85:14   وَهُوَ الْغَفُوْرُ الْوَدُوْدُۙ‏ 
85:14. அவன் மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.
85:15   ذُو الْعَرْشِ الْمَجِيْدُ ۙ‏ 
85:15. அர்ஷுக்குரியவன்;488 மகத்துவ மிக்கவன்.
85:16   فَعَّالٌ لِّمَا يُرِيْدُ ؕ‏ 
85:16. நினைத்ததைச் செய்து முடிப்பவன்.
85:17   هَلْ اَتٰٮكَ حَدِيْثُ الْجُـنُوْدِۙ‏ 
85:18   فِرْعَوْنَ وَثَمُوْدَؕ‏ 
85:17, 18. ஃபிர்அவ்ன் மற்றும் ஸமூது சமுதாயத்தினரின் அந்தப் படையினர் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?
85:19   بَلِ الَّذِيْنَ كَفَرُوْا فِىْ تَكْذِيْبٍۙ‏ 
85:19. எனினும் (ஏகஇறைவனை) மறுப்போர் பொய்யெனக் கருதுவதில் தான் உள்ளனர்.
85:20   وَّاللّٰهُ مِنْ وَّرَآٮِٕهِمْ مُّحِيْطٌۚ‏ 
85:20. அல்லாஹ் அவர்களுக்குப் பின்புறமிருந்து முழுமையாக அறிகிறான்.
85:21   بَلْ هُوَ قُرْاٰنٌ مَّجِيْدٌ ۙ‏ 
85:21. ஆம்! இது மகத்தான குர்ஆன்!
85:22   فِىْ لَوْحٍ مَّحْفُوْظٍ‏ 
85:22. பாதுகாக்கப்பட்ட ஏட்டில்157 உள்ளது.

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 77748