51.   அத்தாரியாத்

புழுதி பரத்தும் காற்றுகள்

மொத்த வசனங்கள் : 60

இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், அத்தாரியாத் என்ற சொல் இடம் பெறுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

51:1   وَالذّٰرِيٰتِ ذَرْوًا ۙ‏ 
51:2   فَالْحٰمِلٰتِ وِقْرًا ۙ‏ 
51:3   فَالْجٰرِيٰتِ يُسْرًا ۙ‏ 
51:4   فَالْمُقَسِّمٰتِ اَمْرًا ۙ‏ 
51:1, 2, 3, 4. வேகமாக புழுதியைப் பரத்துபவை மீதும், மழையைச் சுமப்பவற்றின் மீதும், எளிதாகச் செல்பவை மீதும், கட்டளைகளைப் பங்கிடுவோர் மீதும் சத்தியமாக!379 & 26
51:5   اِنَّمَا تُوْعَدُوْنَ لَصَادِقٌ ۙ‏ 
51:5. நீங்கள் எச்சரிக்கப்படுவது உண்மை.
51:6   وَّاِنَّ الدِّيْنَ لوَاقِعٌ ؕ‏ 
51:6. அந்தத் தீர்ப்பு நடந்தேறும்.
51:7   وَالسَّمَآءِ ذَاتِ الْحُـبُكِ ۙ‏ 
51:7. பாதைகளையுடைய323 வானத்தின்507 மீது சத்தியமாக!379
51:8   اِنَّـكُمْ لَفِىْ قَوْلٍ مُّخْتَلِفٍ ۙ‏ 
51:8. நீங்கள் முரண்பட்ட கூற்றில் இருக்கிறீர்கள்.
51:9   يُّـؤْفَكُ عَنْهُ مَنْ اُفِكَ ؕ‏ 
51:9. இதை விட்டும் திசை திருப்பப்படுபவர் திசை திருப்பப்படுகிறார்.
51:10   قُتِلَ الْخَـرّٰصُوْنَۙ‏ 
51:10. பொய்யர்கள் அழிவார்கள்.
51:11   الَّذِيْنَ هُمْ فِىْ غَمْرَةٍ سَاهُوْنَۙ‏ 
51:11. அவர்கள் மயக்கத்தில் மறந்திருக்கிறார்கள்.
51:12   يَسْـَٔــلُوْنَ اَيَّانَ يَوْمُ الدِّيْنِؕ‏ 
<
51:12. "தீர்ப்பு நாள்1 எப்போது?'' எனக் கேட்கின்றனர்
51:13   يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُوْنَ‏ 
51:13. அவர்கள் நரகத்தில் தண்டிக்கப்படும் நாள்1 தான் அது.
51:14   ذُوْقُوْا فِتْنَتَكُمْؕ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَسْتَعْجِلُوْنَ‏ 
51:14. உங்கள் வேதனையைச் சுவையுங்கள்! எதை அவசரமாகத் தேடினீர்களோ அது இதுவே. (என்று கூறப்படும்.)
51:15   اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّعُيُوْنٍۙ‏ 
51:16   اٰخِذِيْنَ مَاۤ اٰتٰٮهُمْ رَبُّهُمْ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَبْلَ ذٰلِكَ مُحْسِنِيْنَؕ‏ 
51:15, 16. (இறைவனை) அஞ்சியோர் இறைவன் தங்களுக்கு வழங்கியதைப் பெற்றுக் கொண்டு சொர்க்கச் சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். அவர்கள் இதற்கு முன் நன்மை செய்வோராக இருந்தனர்.26
51:17   كَانُوْا قَلِيْلًا مِّنَ الَّيْلِ مَا يَهْجَعُوْنَ‏ 
51:17. இரவில் குறைவாகவே தூங்கிக் கொண்டிருந்தனர்.
51:18   وَبِالْاَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُوْنَ‏ 
51:18. இரவின் கடைசி நேரங்களில் பாவமன்னிப்புத் தேடுவார்கள்.
51:19   وَفِىْۤ اَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّآٮِٕلِ وَالْمَحْرُوْمِ‏ 
51:19. யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும் அவர்களது செல்வங்களில் பங்கு இருந்தது.
51:20   وَفِى الْاَرْضِ اٰيٰتٌ لِّلْمُوْقِنِيْنَۙ‏ 
51:21   وَفِىْۤ اَنْفُسِكُمْ‌ؕ اَفَلَا تُبْصِرُوْنَ‏ 
51:20, 21. உறுதியாக நம்புவோருக்கு பூமியிலும், உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?26
51:22   وَفِى السَّمَآءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ‏ 
51:22. வானத்தில்507 உங்கள் உணவும், நீங்கள் வாக்களிக்கப்பட்டதும் உள்ளன.
51:23   فَوَرَبِّ السَّمَآءِ وَالْاَرْضِ اِنَّهٗ لَحَـقٌّ مِّثْلَ مَاۤ اَنَّكُمْ تَنْطِقُوْنَ‏ 
51:23. வானம்507 மற்றும் பூமியின் இறைவன் மீது ஆணையாக! நீங்கள் பேசுகிறீர்கள் என்பது (உண்மையாக இருப்பது) போல் இது உண்மை.
51:24   هَلْ اَتٰٮكَ حَدِيْثُ ضَيْفِ اِبْرٰهِيْمَ الْمُكْرَمِيْنَ‌ۘ‏ 
51:24. இப்ராஹீமின் மரியாதைக்குரிய விருந்தினர்கள் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா?
51:25   اِذْ دَخَلُوْا عَلَيْهِ فَقَالُوْا سَلٰمًا‌ؕ قَالَ سَلٰمٌ ۚ قَوْمٌ مُّنْكَرُوْنَ‌‏ 
51:25. அவரிடம் அவர்கள் வந்து ஸலாம்159 கூறியபோது அவரும் ஸலாம் கூறினார். அவர்கள் (அவருக்கு) அறிமுகமில்லாத சமுதாயம்!
51:26   فَرَاغَ اِلٰٓى اَهْلِهٖ فَجَآءَ بِعِجْلٍ سَمِيْنٍۙ‏ 
51:26. தமது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார்.
51:27   فَقَرَّبَهٗۤ اِلَيْهِمْ قَالَ اَلَا تَاْكُلُوْنَ‏ 
51:27. அதை அவர்களின் அருகில் வைத்து "சாப்பிட மாட்டீர்களா?''171 என்றார்.
51:28   فَاَوْجَسَ مِنْهُمْ خِيْفَةً ‌ؕ قَالُوْا لَا تَخَفْ‌ ؕ وَبَشَّرُوْهُ بِغُلٰمٍ عَلِيْمٍ‏ 
51:28. அவர்களைப் பற்றிப் பயந்தார். "பயப்படாதீர்!'' என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.
51:29   فَاَقْبَلَتِ امْرَاَتُهٗ فِىْ صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوْزٌ عَقِيْمٌ‏ 
51:29. உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, "நான் மலட்டுக் கிழவியாயிற்றே'' என்றார்.
51:30   قَالُوْا كَذٰلِكِ ۙ قَالَ رَبُّكِ‌ؕ اِنَّهٗ هُوَ الْحَكِيْمُ الْعَلِيْمُ‏ 
51:30. அதற்கவர்கள் "அப்படித்தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன். அறிந்தவன்'' என்றனர்.
51:31   قَالَ فَمَا خَطْبُكُمْ اَيُّهَا الْمُرْسَلُوْنَ‏ 
51:31. "தூதர்களே!161 உங்கள் விஷயம் என்ன?'' என்று கேட்டார்.
51:32   قَالُـوْۤا اِنَّاۤ اُرْسِلْنَاۤ اِلٰى قَوْمٍ مُّجْرِمِيْنَۙ‏ 
51:33   لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّنْ طِيْنٍۙ‏ 
51:34   مُّسَوَّمَةً عِنْدَ رَبِّكَ لِلْمُسْرِفِيْنَ‏ 
51:32, 33, 34. "வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால் அடையாளமிடப்பட்(டு சுடப்பட்)ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்''412 என்று அவர்கள் கூறினர்.26
51:35   فَاَخْرَجْنَا مَنْ كَانَ فِيْهَا مِنَ الْمُؤْمِنِيْنَ‌ۚ‏ 
51:35. அங்கே இருந்த நம்பிக்கை கொண்டோரை வெளியேற்றினோம்.
51:36   فَمَا وَجَدْنَا فِيْهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِيْنَ‌ۚ‏ 
51:36. முஸ்லிம்களின்295 ஒரு வீட்டைத் தவிர வேறு எதையும் அங்கே நாம் காணவில்லை.
51:37   وَتَرَكْنَا فِيْهَاۤ اٰيَةً لِّـلَّذِيْنَ يَخَافُوْنَ الْعَذَابَ الْاَلِيْمَؕ‏ 
51:37. துன்புறுத்தும் வேதனை பற்றி அஞ்சுவோருக்கு அங்கே சான்றை விட்டு வைத்தோம்.
51:38   وَفِىْ مُوْسٰۤی اِذْ اَرْسَلْنٰهُ اِلٰى فِرْعَوْنَ بِسُلْطٰنٍ مُّبِيْنٍ‏ 
51:39   فَتَوَلّٰى بِرُكْنِهٖ وَقَالَ سٰحِرٌ اَوْ مَجْنُوْنٌ‏ 
51:38, 39. மூஸாவிடமும் (படிப்பினை) இருக்கிறது. அவரைத் தெளிவான சான்றுடன் ஃபிர்அவ்னிடம் அனுப்பியபோது, அவன் தனது பலத்தின் காரணமாகப் புறக்கணித்தான். "இவர் சூனியக்காரரோ,357 பைத்தியக்காரரோ''285 எனக் கூறினான்.26
51:40   فَاَخَذْنٰهُ وَجُنُوْدَهٗ فَنَبَذْنٰهُمْ فِى الْيَمِّ وَهُوَ مُلِيْمٌؕ‏ 
51:40. எனவே அவனையும், அவனது படையினரையும் தண்டித்தோம். அவன் இழிந்தவனாக இருக்க அவர்களைக் கடலில் வீசினோம்.
51:41   وَفِىْ عَادٍ اِذْ اَرْسَلْنَا عَلَيْهِمُ الرِّيْحَ الْعَقِيْمَ‌ۚ‏ 
51:41. ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. அவர்கள் மீது மலட்டுக் காற்றை அனுப்பினோம்.366
51:42   مَا تَذَرُ مِنْ شَىْءٍ اَتَتْ عَلَيْهِ اِلَّا جَعَلَتْهُ كَالرَّمِيْمِؕ‏ 
51:42. அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை.
51:43   وَفِىْ ثَمُوْدَ اِذْ قِيْلَ لَهُمْ تَمَتَّعُوْا حَتّٰى حِيْنٍ‏ 
51:43. ஸமூது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. "குறிப்பிட்ட காலம் வரை அனுபவியுங்கள்!'' என்று அவர்களுக்குக் கூறப்பட்டது.
51:44   فَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ فَاَخَذَتْهُمُ الصّٰعِقَةُ وَ هُمْ يَنْظُرُوْنَ‏ 
51:44. அவர்கள் தமது இறைவனின் கட்டளையை மீறினர். எனவே அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்களை இடி முழக்கம் தாக்கியது.
51:45   فَمَا اسْتَطَاعُوْا مِنْ قِيَامٍ وَّمَا كَانُوْا مُنْتَصِرِيْنَۙ‏ 
51:45. அவர்கள் எழுந்து நிற்கவும் சக்தி பெறவில்லை. அவர்கள் உதவி பெறுவோராகவும் இல்லை.
51:46   وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُ‌ؕ اِنَّهُمْ كَانُوْا قَوْمًا فٰسِقِيْنَ‏ 
51:46. முன்னர் நூஹுடைய சமுதாயத்தையும் (அழித்தோம்) அவர்கள் குற்றம் செய்யும் கூட்டமாக இருந்தனர்.
51:47   وَ السَّمَآءَ بَنَيْنٰهَا بِاَيْٮدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ‏ 
51:47. (நமது) வலிமையால் வானத்தைப் 507 படைத்தோம். மேலும் (அதை) நாம் விரிவுபடுத்துவோராவோம்.421
51:48   وَالْاَرْضَ فَرَشْنٰهَا فَنِعْمَ الْمٰهِدُوْنَ‏ 
51:48. பூமியை விரித்தோம். நாம் அழகுற விரிப்பவர்கள்.
51:49   وَمِنْ كُلِّ شَىْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُوْنَ‏ 
51:49. நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.242
51:50   فَفِرُّوْۤا اِلَى اللّٰهِ‌ؕ اِنِّىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌ‌ۚ‏ 
51:51   وَلَا تَجْعَلُوْا مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ‌ؕ اِنِّىْ لَـكُمْ مِّنْهُ نَذِيْرٌ مُّبِيْنٌ‌ۚ‏ 
51:50, 51. எனவே அல்லாஹ்வை நோக்கி விரையுங்கள்! நான் அவனிடமிருந்து உங்களைத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன். அல்லாஹ்வுடன் வேறு கடவுளைக் கற்பனை செய்யாதீர்கள்! நான் அவனிடமிருந்து உங்களைத் தெளிவாக எச்சரிக்கை செய்பவன் (என்று ஒவ்வொரு தூதரும் கூறினர்.)26
51:52   كَذٰلِكَ مَاۤ اَتَى الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا قَالُوْا سَاحِرٌ اَوْ مَجْنُوْنٌ‌ۚ‏ 
51:52. இவ்வாறே அவர்களுக்கு முன் சென்றோரிடம் எந்தத் தூதர் வந்தாலும் பைத்தியக்காரர் என்றோ, சூனியக்காரர்285 என்றோ கூறாமல் இருந்ததில்லை.357
51:53   اَتَوَاصَوْا بِهٖ‌ۚ بَلْ هُمْ قَوْمٌ طَاغُوْنَ‌ۚ‏ 
51:53. அவர்கள் ஒருவருக்கொருவர் இது குறித்து பேசி வைத்துக் கொண்டார்களா? மாறாக அவர்கள் வரம்பு மீறிய கூட்டமாவர்.
51:54   فَتَوَلَّ عَنْهُمْ فَمَاۤ اَنْتَ بِمَلُوْمٍ‏ 
51:54. எனவே (முஹம்மதே!) அவர்களை அலட்சியம் செய்வீராக! நீர் குறை கூறப்பட மாட்டீர்.
51:55   وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ‏ 
51:55. அறிவுரை கூறுவீராக! அந்த அறிவுரை நம்பிக்கை கொண்டோருக்குப் பயன் தரும்.
51:56   وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏ 
51:56. ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.368
51:57   مَاۤ اُرِيْدُ مِنْهُمْ مِّنْ رِّزْقٍ وَّمَاۤ اُرِيْدُ اَنْ يُّطْعِمُوْنِ‏ 
51:57. நான் அவர்களிடம் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் எனக்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை.
51:58   اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِيْنُ‏ 
51:58. அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன்;463 உறுதியானவன்; ஆற்றல் உடையவன்.
51:59   فَاِنَّ لِلَّذِيْنَ ظَلَمُوْا ذَنُوْبًا مِّثْلَ ذَنُوْبِ اَصْحٰبِهِمْ فَلَا يَسْتَعْجِلُوْنِ‏ 
51:59. அநீதி இழைத்தோருக்கு அவர்களின் முன் சென்ற சகாக்களின் தண்டனையைப் போல் தண்டனை உள்ளது. எனவே அவர்கள் என்னிடம் அவசரப்பட வேண்டாம்.
51:60   فَوَيْلٌ لِّـلَّذِيْنَ كَفَرُوْا مِنْ يَّوْمِهِمُ الَّذِىْ يُوْعَدُوْنَ‏ 
51:60. (ஏகஇறைவனை) மறுப்போருக்கு அவர்கள் எச்சரிக்கப்பட்ட நாளில்1 கேடு உள்ளது.

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 6978