86.   அத்தாரிக்

விடிவெள்ளி

மொத்த வசனங்கள் : 17

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தாரிக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

86:1   وَالسَّمَآءِ وَالطَّارِقِۙ‏ 
86:1. வானத்தின்507 மீதும், தாரிக்202 மீதும் சத்தியமாக!379
86:2   وَمَاۤ اَدْرٰٮكَ مَا الطَّارِقُۙ‏ 
86:2. தாரிக் என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
86:3   النَّجْمُ الثَّاقِبُۙ‏ 
86:3. அது ஒளி வீசும் நட்சத்திரம்.
86:4   اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَيْهَا حَافِظٌؕ‏ 
86:4. ஒவ்வொருவர் மீதும் காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை.
86:5   فَلْيَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَؕ‏ 
86:5. மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான்368 என்பதைச் சிந்திக்கட்டும்.
86:6   خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍۙ‏ 
86:6. குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான்.506
86:7   يَّخْرُجُ مِنْۢ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَآٮِٕبِؕ‏ 
86:7. அது முதுகுத் தண்டுக்கும் முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.231
86:8   اِنَّهٗ عَلٰى رَجْعِهٖ لَقَادِرٌؕ‏ 
86:8. இவனை மீட்பதற்கு அவன் ஆற்றலுடையவன்.
86:9   يَوْمَ تُبْلَى السَّرَآٮِٕرُۙ‏ 
86:9. அந்நாளில் இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும்.
86:10   فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّلَا نَاصِرٍؕ‏ 
86:10. அவனுக்கு எந்த வலிமையும் இருக்காது. எந்த உதவியாளரும் இருக்க மாட்டார்கள்.
86:11   وَالسَّمَآءِ ذَاتِ الرَّجْعِۙ‏ 
86:11. திருப்பித் தரும்149 வானத்தின்507 மீது சத்தியமாக!379
86:12   وَالْاَرْضِ ذَاتِ الصَّدْعِۙ‏ 
86:12. பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக!379
86:13   اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌۙ‏ 
86:13. இது தெளிவான கூற்றாகும்.
86:14   وَّمَا هُوَ بِالْهَزْلِؕ‏ 
86:14. இது கேலிக்குரியதல்ல.
86:15   اِنَّهُمْ يَكِيْدُوْنَ كَيْدًا ۙ‏ 
86:15. அவர்கள் கடும் சூழ்ச்சி செய்கின்றனர்.
86:16   وَّاَكِيْدُ كَيْدًا ۚۖ‏ 
86:16. நானும் கடும் சூழ்ச்சி செய்கிறேன்.6
86:17   فَمَهِّلِ الْكٰفِرِيْنَ اَمْهِلْهُمْ رُوَيْدًا‏ 
86:17. எனவே (என்னை) மறுப்போருக்கு அவகாசம் அளிப்பீராக! சொற்ப அவகாசம் அளிப்பீராக!

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 294703