84.   அல்இன்ஷிகாக்

பிளந்து விடுதல்

மொத்த வசனங்கள் : 25

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றிப் பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

84:1   اِذَا السَّمَآءُ انْشَقَّتْۙ‏ 
84:1. வானம்507 பிளந்து விடும்போது,
84:2   وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْۙ‏ 
84:2. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும்போது,
84:3   وَاِذَا الْاَرْضُ مُدَّتْؕ‏ 
84:3. பூமி நீட்டப்படும்போது,
84:4   وَاَلْقَتْ مَا فِيْهَا وَتَخَلَّتْۙ‏ 
84:4. தன்னிடம் உள்ளதை வெளிப்படுத்தி அது வெறுமையாகி விடும்போது,
84:5   وَاَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْؕ‏ 
84:5. கடமையாக்கப்பட்ட நிலையில் தனது இறைவனின் கட்டளைக்கு அது அடிபணியும்போது,
84:6   يٰۤاَيُّهَا الْاِنْسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰى رَبِّكَ كَدْحًا فَمُلٰقِيْهِ‌ۚ‏ 
84:6. மனிதனே! உனது இறைவனை நோக்கிக் கடுமையாக முயற்சிக்கிறாய். எனவே அவனைச் சந்திப்பாய்.
84:7   فَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖۙ‏ 
84:8   فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيْرًا ۙ‏ 
84:7, 8. யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார்.26
84:9   وَّيَنْقَلِبُ اِلٰٓى اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ‏ 
84:9. அவர் தனது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் செல்வார்.
84:10   وَاَمَّا مَنْ اُوْتِىَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهْرِهٖۙ‏ 
84:11   فَسَوْفَ يَدْعُوْا ثُبُوْرًا ۙ‏ 
84:10, 11. முதுகுக்குப் பின்புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான்.26
84:12   وَّيَصْلٰى سَعِيْرًا ؕ‏ 
84:12. நரகிலும் கருகுவான்.
84:13   اِنَّهٗ كَانَ فِىْۤ اَهْلِهٖ مَسْرُوْرًا ؕ‏ 
84:13. அவன் (இவ்வுலகில்) தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்தான்.
84:14   اِنَّهٗ ظَنَّ اَنْ لَّنْ يَّحُوْرَ ۛۚ‏ 
84:14. "நான் (இறைவனிடம்) மீளவே மாட்டேன்'' என்று அவன் எண்ணினான்.
84:15   بَلٰٓى ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِيْرًا ؕ‏ 
84:15. அவ்வாறில்லை! அவனது இறைவன் அவனைப் பார்ப்பவனாக488 இருந்தான்.
84:16   فَلَاۤ اُقْسِمُ بِالشَّفَقِۙ‏ 
84:16. அடிவானத்தின் செம்மையின் மீது சத்தியம் செய்கிறேன்.
84:17   وَالَّيْلِ وَمَا وَسَقَۙ‏ 
84:18   وَالْقَمَرِ اِذَا اتَّسَقَۙ‏ 
84:17, 18. இரவின் மீதும், அது உள்ளடக்கியவற்றின் மீதும், முழுமை பெற்ற நிலவின் மீதும் சத்தியமாக!379
84:19   لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍؕ‏ 
84:19. நீங்கள் படிப்படியாக ஏறிச் செல்வீர்கள்.
84:20   فَمَا لَهُمْ لَا يُؤْمِنُوْنَۙ‏ 
84:20. அவர்கள் நம்பிக்கை கொள்ளாமலிருக்க என்ன நேர்ந்தது?
84:21   وَاِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْاٰنُ لَا يَسْجُدُوْنَ ؕ ۩‏ 
84:21. அவர்களுக்குக் குர்ஆன் ஓதிக் காட்டப்படும்போது ஸஜ்தாச் செய்வதில்லை.396
84:22   بَلِ الَّذِيْنَ كَفَرُوْا يُكَذِّبُوْنَ ۖ‏ 
84:22. மாறாக (ஏகஇறைவனை) மறுப்போர் பொய்யெனக் கருதுகின்றனர்.
84:23   وَاللّٰهُ اَعْلَمُ بِمَا يُوْعُوْنَ ۖ‏ 
84:23. அவர்கள் மறைப்பதை அல்லாஹ் அறிவான்.
84:24   فَبَشِّرْهُمْ بِعَذَابٍ اَلِيْمٍۙ‏ 
84:24. எனவே அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையை எச்சரிப்பீராக!
84:25   اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَيْرُ مَمْنُوْنٍ‏ 
84:25. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவில்லாத கூலி உண்டு.

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 48255