67.   அல் முல்க்

அதிகாரம்

மொத்த வசனங்கள் : 30

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அதிகாரம் அவன் கையில் எனத் துவங்குவதால் இந்த அத்தியாயத்திற்கு அதிகாரம் என்று பெயரிடப்பட்டது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

67:1   تَبٰرَكَ الَّذِىْ بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرُۙ‏ 
67:1. எவனது கைவசம் அதிகாரம் இருக்கிறதோ அவன் பாக்கியமுடையோன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.
67:2   اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا ؕ وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏ 
67:2. உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக484 மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
67:3   الَّذِىْ خَلَقَ سَبْعَ سَمٰوٰتٍ طِبَاقًا‌ ؕ مَا تَرٰى فِىْ خَلْقِ الرَّحْمٰنِ مِنْ تَفٰوُتٍ‌ ؕ فَارْجِعِ الْبَصَرَۙ هَلْ تَرٰى مِنْ فُطُوْرٍ‏ 
67:3. அவனே ஏழு வானங்களை 507 அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காணமாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! எதேனும் குறையைக் காண்கிறீரா?
67:4   ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنْقَلِبْ اِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَّهُوَ حَسِيْرٌ‏ 
67:4. இரு தடவை பார்வையைச் செலுத்துப்பார்! களைப்புற்று இழிந்ததாக பார்வை உம்மைத் திரும்ப அடையும்.
67:5   وَلَـقَدْ زَيَّـنَّا السَّمَآءَ الدُّنْيَا بِمَصَابِيْحَ وَجَعَلْنٰهَا رُجُوْمًا لِّلشَّيٰطِيْنِ‌ وَاَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيْرِ‏ 
67:5. முதல் வானத்தை 507 விளக்குகளால் அலங்கரித்தோம். அதை ஷைத்தான்கள் மீது எறியப்படும் பொருட்களாக ஆக்கினோம்.307 அவர்களுக்கு நரகத்தின் வேதனையைத் தயாரித்துள்ளோம்.
67:6   وَلِلَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ‌ؕ وَبِئْسَ الْمَصِيْرُ‏ 
67:6. தமது இறைவனை மறுத்தோருக்கு நரகத்தின் "வேதனை உள்ளது'. (அது) கெட்ட தங்குமிடம்.
67:7   اِذَاۤ اُلْقُوْا فِيْهَا سَمِعُوْا لَهَا شَهِيْقًا وَّهِىَ تَفُوْرُۙ‏ 
67:7. அதில் அவர்கள் போடப்படும்போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கடும் இரைச்சலைச் செவியுறுவார்கள்.
67:8   تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ‌ؕ كُلَّمَاۤ اُلْقِىَ فِيْهَا فَوْجٌ سَاَلَهُمْ خَزَنَـتُهَاۤ اَلَمْ يَاْتِكُمْ نَذِيْرٌ‏ 
67:8. கோபத்தால் அது வெடித்திட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் "எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.
67:9   قَالُوْا بَلٰى قَدْ جَآءَنَا نَذِيْرٌ  ۙ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللّٰهُ مِنْ شَىْءٍ ۖۚ اِنْ اَنْتُمْ اِلَّا فِىْ ضَلٰلٍ كَبِيْرٍ‏ 
67:9. அதற்கவர்கள் "ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம்'' எனக் கூறுவார்கள்.
67:10   وَقَالُوْا لَوْ كُنَّا نَسْمَعُ اَوْ نَعْقِلُ مَا كُنَّا فِىْۤ اَصْحٰبِ السَّعِيْرِ‏ 
67:10. நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.
67:11   فَاعْتَرَفُوْا بِذَنْۢبِهِمْ‌ۚ فَسُحْقًا لِّاَصْحٰبِ السَّعِيْرِ‏ 
67:11. மேலும் தமது குற்றங்களை ஒப்புக் கொள்வார்கள். அப்போது நரகவாசிகளுக்குக் கேடு தான்.
67:12   اِنَّ الَّذِيْنَ يَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَيْبِ لَهُمْ مَّغْفِرَةٌ وَّاَجْرٌ كَبِيْرٌ‏ 
67:12. தனிமையில் தமது இறைவனை அஞ்சுவோருக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு.
67:13   وَاَسِرُّوْا قَوْلَـكُمْ اَوِ اجْهَرُوْا بِهٖؕ اِنَّهٗ عَلِيْمٌۢ بِذَاتِ الصُّدُوْرِ‏ 
67:13. உங்கள் கூற்றை இரகசியமாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்.
67:14   اَلَا يَعْلَمُ مَنْ خَلَقَؕ وَهُوَ اللَّطِيْفُ الْخَبِيْرُ‏ 
67:14. படைத்தவன் அறிய மாட்டானா? அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
67:15   هُوَ الَّذِىْ جَعَلَ لَـكُمُ الْاَرْضَ ذَلُوْلًا فَامْشُوْا فِىْ مَنَاكِبِهَا وَكُلُوْا مِنْ رِّزْقِهٖ‌ؕ وَاِلَيْهِ النُّشُوْرُ‏ 
67:15. அவனே பூமியை (பயன்படுத்த) எளிதானதாக உங்களுக்கு அமைத்தான். எனவே அதன் பல பகுதிகளிலும் செல்லுங்கள்! அவனது உணவை உண்ணுங்கள்! அவனிடமே மீளுதல் உள்ளது.
67:16   ءَاَمِنْتُمْ مَّنْ فِىْ السَّمَآءِ اَنْ يَّخْسِفَ بِكُمُ الْاَرْضَ فَاِذَا هِىَ تَمُوْرُۙ‏ 
67:16. வானத்தில் 507 உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்.
67:17   اَمْ اَمِنْتُمْ مَّنْ فِى السَّمَآءِ اَنْ يُّرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا‌ ؕ فَسَتَعْلَمُوْنَ كَيْفَ نَذِيْرِ‏ 
67:17. அல்லது வானத்தில்507 உள்ளவன் உங்கள் மீது கல்மழையை இறக்குவதில் அச்சமற்று இருக்கிறீர்களா? எனது எச்சரிக்கை எத்தகையது என்பதை அப்போது அறிந்து கொள்வீர்கள்.
67:18   وَلَـقَدْ كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَكَيْفَ كَانَ نَكِيْرِ‏ 
67:18. அவர்களுக்கு முன்சென்றோரும் பொய்யெனக் கருதினர். அப்போது எனது பதிலடி எவ்வாறு இருந்தது?
67:19   اَوَلَمْ يَرَوْا اِلَى الطَّيْرِ فَوْقَهُمْ صٰٓفّٰتٍ وَّيَقْبِضْنَؕؔ ۘ مَا يُمْسِكُهُنَّ اِلَّا الرَّحْمٰنُ‌ؕ اِنَّهٗ بِكُلِّ شَىْءٍۢ بَصِيْرٌ‏ 
67:19. அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றை கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை.260 அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.488
67:20   اَمَّنْ هٰذَا الَّذِىْ هُوَ جُنْدٌ لَّكُمْ يَنْصُرُكُمْ مِّنْ دُوْنِ الرَّحْمٰنِ‌ؕ اِنِ الْكٰفِرُوْنَ اِلَّا فِىْ غُرُوْرٍ‌ۚ‏ 
67:20. அளவற்ற அருளாளனையன்றி உங்களுக்கு உதவி செய்யும் உங்களுக்குரிய படையினர் உள்ளனரா? (அவனை) மறுப்போர் ஏமாற்றத்திலேயே உள்ளனர்.
67:21   اَمَّنْ هٰذَا الَّذِىْ يَرْزُقُكُمْ اِنْ اَمْسَكَ رِزْقَهٗ‌ ۚ بَلْ لَّجُّوْا فِىْ عُتُوٍّ وَّنُفُوْرٍ‏ 
67:21. அவன் தனது உணவை நிறுத்தி விட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா?463 மாறாக வரம்பு மீறுவதிலும், வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கி விட்டனர்.
67:22   اَفَمَنْ يَّمْشِىْ مُكِبًّا عَلٰى وَجْهِهٖۤ اَهْدٰٓى اَمَّنْ يَّمْشِىْ سَوِيًّا عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ 
67:22. முகம் குப்புற விழுந்து கிடப்பவன் நேர்வழி பெற்றவனா? அல்லது நேரான பாதையில் சீராக நடந்து செல்பவனா?
67:23   قُلْ هُوَ الَّذِىْۤ اَنْشَاَكُمْ وَجَعَلَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصَارَ وَ الْاَفْـــِٕدَةَ ‌ ؕ قَلِيْلًا مَّا تَشْكُرُوْنَ‏ 
67:23. அவனே உங்களைப் படைத்தான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள் என்று கூறுவீராக!
67:24   قُلْ هُوَ الَّذِىْ ذَرَاَكُمْ فِى الْاَرْضِ وَاِلَيْهِ تُحْشَرُوْنَ‏ 
67:24. அவனே பூமியில் உங்களைப் பரவச் செய்தான். அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்றும் கூறுவீராக!
67:25   وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ‏ 
67:25. "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அந்த எச்சரிக்கை எப்போது?'' எனக் கேட்கின்றனர்.
67:26   قُلْ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ وَاِنَّمَاۤ اَنَا نَذِيْرٌ مُّبِيْنٌ‏ 
67:26. "அந்த அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. நான் தெளிவாக எச்சரிப்பவன் மட்டுமே'' என (முஹம்மதே) கூறுவீராக!
67:27   فَلَمَّا رَاَوْهُ زُلْفَةً سِیْٓــَٔتْ وُجُوْهُ الَّذِيْنَ كَفَرُوْا وَقِيْلَ هٰذَا الَّذِىْ كُنْتُمْ بِهٖ تَدَّعُوْنَ‏ 
67:27. அதை அருகில் அவர்கள் பார்க்கும்போது (ஏகஇறைவனை) மறுத்தோரின் முகங்கள் கெட்டுவிடும். "நீங்கள் தேடிக் கொண்டிருந்தது இதுவே'' எனக் கூறப்படும்.
67:28   قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَهْلَـكَنِىَ اللّٰهُ وَمَنْ مَّعِىَ اَوْ رَحِمَنَا ۙ فَمَنْ يُّجِيْرُ الْكٰفِرِيْنَ مِنْ عَذَابٍ اَلِيْمٍ‏ 
67:28. "என்னையும், என்னுடன் உள்ளவர்களையும் அல்லாஹ் அழித்தால் அல்லது எங்களுக்கு அருள் புரிந்தால் துன்புறுத்தும் வேதனையிலிருந்து (ஏகஇறைவனை) மறுப்போரைக் காப்பவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்'' என்றும் கூறுவீராக!
67:29   قُلْ هُوَ الرَّحْمٰنُ اٰمَنَّا بِهٖ وَعَلَيْهِ تَوَكَّلْنَا‌ۚ فَسَتَعْلَمُوْنَ مَنْ هُوَ فِىْ ضَلٰلٍ مُّبِيْنٍ‏ 
67:29. அவனே அளவற்ற அருளாளன். அவனை நம்பினோம். அவனையே சார்ந்திருக்கிறோம். தெளிவான வழிகேட்டில் உள்ளவர் யார் என்பதை அறிந்து கொள்வீர்கள் எனக் கூறுவீராக!
67:30   قُلْ اَرَءَيْتُمْ اِنْ اَصْبَحَ مَآؤُكُمْ غَوْرًا فَمَنْ يَّاْتِيْكُمْ بِمَآءٍ مَّعِيْنٍ‏ 
67:30. "உங்கள் தண்ணீர் வற்றிவிட்டால் ஊறி வரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' எனக் கேட்பீராக!

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 44434