97.   அல்கத்ர்-

மகத்துவம்

மொத்த வசனங்கள் : 5

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கத்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

97:1   اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ ۖ ۚ‏ 
97:1. மகத்துவமிக்க இரவில்447 இதை (குர்ஆனை) நாம் அருளினோம்.
97:2   وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِؕ‏ 
97:2. மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
97:3   لَيْلَةُ الْقَدْرِ  ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍؕ‏ 
97:3. மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.
97:4   تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ‌ۚ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ‏ 
97:4. வானவர்களும், ரூஹும்444 அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்.
97:5   سَلٰمٌ   ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ‏ 
97:5. ஸலாம்! 159 இது வைகறை வரை இருக்கும்.

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 269975