94. அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்)
விரிவாக்குதல்
மொத்த வசனங்கள் : 8
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், உமது உள்ளத்தை விரிவாக்கவில்லையா? என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
94:1 اَلَمْ نَشْرَحْ لَـكَ صَدْرَكَۙ
94:1. உமது உள்ளத்தை நாம் விரிவாக்கவில்லையா?
94:2 وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَۙ
94:3 الَّذِىْۤ اَنْقَضَ ظَهْرَكَۙ
94:2, 3. (முஹம்மதே!) உமது முதுகை முறித்துக் கொண்டிருந்த உமது சுமையை உம்மை விட்டும் நாம் இறக்கவில்லையா?
26
94:4 وَرَفَعْنَا لَـكَ ذِكْرَكَؕ
94:4. உமக்காக உமது புகழை உயர்த்தினோம்.
94:5 فَاِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ۙ
94:5. சிரமத்துடன் தான் எளியதும் உள்ளது.
94:6 اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ؕ
94:6. சிரமத்துடன் தான் எளியதும் உள்ளது.
94:7 فَاِذَا فَرَغْتَ فَانْصَبْۙ
94:7. எனவே ஓய்வெடுத்ததும் தயாராவீராக!
94:8 وَاِلٰى رَبِّكَ فَارْغَبْ
94:8. உமது இறைவனிடம் ஆசை வைப்பீராக!