92.   அல்லைல்

இரவு

மொத்த வசனங்கள் : 21

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் லைல் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

92:1   وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ‏ 
92:1. மூடிக் கொள்ளும் இரவின் மீது சத்தியமாக!379
92:2   وَالنَّهَارِ اِذَا تَجَلّٰىۙ‏ 
92:2. பிரகாசிக்கும் பகல் மீது சத்தியமாக!379
92:3   وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْاُنْثٰٓىۙ‏ 
92:3. ஆணையும், பெண்ணையும் அவன் படைத்திருப்பதன்368 மீது சத்தியமாக!379
92:4   اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰىؕ‏ 
92:4. உங்கள் முயற்சி பலதரப்பட்டதாக உள்ளது.
92:5   فَاَمَّا مَنْ اَعْطٰى وَاتَّقٰىۙ‏ 
92:6   وَصَدَّقَ بِالْحُسْنٰىۙ‏ 
92:7   فَسَنُيَسِّرُهٗ لِلْيُسْرٰىؕ‏ 
92:5, 6, 7. யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம்.26
92:8   وَاَمَّا مَنْۢ بَخِلَ وَاسْتَغْنٰىۙ‏ 
92:9   وَكَذَّبَ بِالْحُسْنٰىۙ‏ 
92:10   فَسَنُيَسِّرُهٗ لِلْعُسْرٰىؕ‏ 
92:8, 9, 10. யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னை கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம்.26
92:11   وَمَا يُغْنِىْ عَنْهُ مَالُهٗۤ اِذَا تَرَدّٰىؕ‏ 
92:11. அவன் விழும்போது அவனது செல்வம் அவனைக் காக்காது.
92:12   اِنَّ عَلَيْنَا لَـلْهُدٰىۖ‏ 
92:12. நேர்வழி நம்மைச் சேர்ந்தது.
92:13   وَاِنَّ لَـنَا لَـلْاٰخِرَةَ وَالْاُوْلٰى‏ 
92:13. மறுமையும், இம்மையும் நமக்கே உரியது.
92:14   فَاَنْذَرْتُكُمْ نَارًا تَلَظّٰى‌ۚ‏ 
92:14. கொழுந்து விட்டு எரியும் நெருப்பை உங்களுக்கு எச்சரிக்கிறேன்.
92:15   لَا يَصْلٰٮهَاۤ اِلَّا الْاَشْقَىۙ‏ 
92:15. துர்பாக்கியசாலியைத் தவிர யாரும் அதில் கருக மாட்டார்கள்.
92:16   الَّذِىْ كَذَّبَ وَتَوَلّٰىؕ‏ 
92:16. அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்தவன்.
92:17   وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏ 
92:17. இறையச்சமுடையவர் அதிலிருந்து விலக்கப்படுவார்.
92:18   الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰى‌ۚ‏ 
92:18. அவர் தனது செல்வத்தை வழங்கி தூய்மையடைந்தவர்.
92:19   وَمَا لِاَحَدٍ عِنْدَهٗ مِنْ نِّعْمَةٍ تُجْزٰٓىۙ‏ 
92:20   اِلَّا ابْتِغَآءَ وَجْهِ رَبِّهِ الْاَعْلٰى‌ۚ‏ 
92:19, 20. மிக உயர்ந்த தன் இறைவனின் முகத்தைத் தேடுவது தவிர திருப்பிச் செலுத்தப்படும் எந்த நன்றிக் கடனும் எவரிடமும் அவருக்கு இருக்காது.26
92:21   وَلَسَوْفَ يَرْضٰى‏ 
92:21. பின்னர் அவர் திருப்தியடைவார்.

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 219785