87.   அல்அஃலா

மிக உயர்ந்தவன்

மொத்த வசனங்கள் : 19

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

87:1   سَبِّحِ اسْمَ رَبِّكَ الْاَعْلَىۙ‏ 
87:1. மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
87:2   الَّذِىْ خَلَقَ فَسَوّٰى ۙ‏ 
87:2. அவனே படைத்தான்.368 ஒழுங்குற அமைத்தான்.
87:3   وَالَّذِىْ قَدَّرَ فَهَدٰى ۙ‏ 
87:3. அவனே நிர்ணயித்தான். வழிகாட்டினான்.
87:4   وَالَّذِىْۤ اَخْرَجَ الْمَرْعٰى ۙ‏ 
87:4. அவனே மேய்ச்சலுக்குரியதை வெளிப்படுத்தினான்.
87:5   فَجَعَلَهٗ غُثَآءً اَحْوٰىؕ‏ 
87:5. பின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக்கினான்.
87:6   سَنُقْرِئُكَ فَلَا تَنْسٰٓىۙ‏ 
87:7   اِلَّا مَا شَآءَ اللّٰهُ‌ؕ اِنَّهٗ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفٰىؕ‏ 
87:6, 7. (முஹம்மதே!) உமக்கு ஓதிக் காட்டுவோம்.152 நீர் மறக்க மாட்டீர்.220 அல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான்.26
87:8   وَنُيَسِّرُكَ لِلْيُسْرٰى ‌ۖ‌ۚ‏ 
87:8. (முஹம்மதே!) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம்.
87:9   فَذَكِّرْ اِنْ نَّفَعَتِ الذِّكْرٰىؕ‏ 
87:9. அறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக!
87:10   سَيَذَّكَّرُ مَنْ يَّخْشٰىۙ‏ 
87:10. (இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான்.
87:11   وَيَتَجَنَّبُهَا الْاَشْقَىۙ‏ 
87:11. துர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான்.
87:12   الَّذِىْ يَصْلَى النَّارَ الْكُبْرٰى‌ۚ‏ 
87:12. அவனே பெரும் நெருப்பில் கருகுவான்.
87:13   ثُمَّ لَا يَمُوْتُ فِيْهَا وَلَا يَحْيٰىؕ‏ 
87:13. பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான்.
87:14   قَدْ اَفْلَحَ مَنْ تَزَكّٰىۙ‏ 
87:14. தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான்.
87:15   وَذَكَرَ اسْمَ رَبِّهٖ فَصَلّٰى‌ ؕ‏ 
87:15. அவன், தனது இறைவனின் பெயரை நினைத்து தொழுதான்.
87:16   بَلْ تُؤْثِرُوْنَ الْحَيٰوةَ الدُّنْيَا ۖ‏ 
87:16. ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள்.
87:17   وَالْاٰخِرَةُ خَيْرٌ وَّ اَبْقٰىؕ‏ 
87:17. மறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும்.
87:18   اِنَّ هٰذَا لَفِى الصُّحُفِ الْاُوْلٰىۙ‏ 
87:19   صُحُفِ اِبْرٰهِيْمَ وَمُوْسٰى‏ 
87:18, 19. இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது.26

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 294833