80.   அபஸ

கடுகடுத்தார்

மொத்த வசனங்கள் : 42

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கடுகடுத்தார் என்ற சொல் இடம் பெறுவதால் அதையே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கியுள்ளனர்.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

80:1   عَبَسَ وَتَوَلّٰٓىۙ‏ 
80:2   اَنْ جَآءَهُ الْاَعْمٰىؕ‏ 
80:1, 2. தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக168 இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.26
80:3   وَمَا يُدْرِيْكَ لَعَلَّهٗ يَزَّكّٰٓىۙ‏ 
80:3. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்?
80:4   اَوْ يَذَّكَّرُ فَتَنْفَعَهُ الذِّكْرٰىؕ‏ 
80:4. அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.
80:5   اَمَّا مَنِ اسْتَغْنٰىۙ‏ 
80:6   فَاَنْتَ لَهٗ تَصَدّٰىؕ‏ 
80:5, 6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.26
80:7   وَمَا عَلَيْكَ اَلَّا يَزَّكّٰٓىؕ‏ 
80:7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.
80:8   وَاَمَّا مَنْ جَآءَكَ يَسْعٰىۙ‏ 
80:9   وَهُوَ يَخْشٰىۙ‏ 
80:10   فَاَنْتَ عَنْهُ تَلَهّٰى‌ۚ‏ 
80:8, 9, 10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.26
80:11   كَلَّاۤ اِنَّهَا تَذْكِرَةٌ ۚ‏ 
80:11. அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை.
80:12   فَمَنْ شَآءَ ذَكَرَهٗ‌ۘ‏ 
80:12. விரும்பியவர் இதில் படிப்பினை பெற்றுக் கொள்வார்.
80:13   فِىْ صُحُفٍ مُّكَرَّمَةٍۙ‏ 
80:14   مَّرْفُوْعَةٍ مُّطَهَّرَةٍ ۭۙ‏ 
80:15   بِاَيْدِىْ سَفَرَةٍۙ‏ 
80:16   كِرَامٍۢ بَرَرَةٍؕ‏ 
80:13, 14, 15, 16. இது தூய்மைப்படுத்தப்பட்டு உயர்வாக்கப்பட்ட மதிப்பு மிக்க ஏடுகளில்461 உள்ளது. மரியாதைக்குரிய நல்லோர்களான எழுத்தர்களின் (வானவர்களின்) கைகளில் உள்ளது.26
80:17   قُتِلَ الْاِنْسَانُ مَاۤ اَكْفَرَهٗؕ‏ 
80:17. மனிதன் சபிக்கப்பட்டு விட்டான். அவன் எப்படி நன்றி கெட்டவனாக இருக்கிறான்?
80:18   مِنْ اَىِّ شَىْءٍ خَلَقَهٗؕ‏ 
80:18. எந்தப் பொருளிலிருந்து அவனை (இறைவன்) படைத்தான்?
80:19   مِنْ نُّطْفَةٍؕ خَلَقَهٗ فَقَدَّرَهٗ ۙ‏ 
80:19. விந்துத் துளியிலிருந்து அவனைப் படைத்து அவனுக்கு (விதியை) நிர்ணயித்தான்.506
80:20   ثُمَّ السَّبِيْلَ يَسَّرَهٗۙ‏ 
80:20. பின்னர் வழியை அவனுக்கு எளிதாக்கினான்.
80:21   ثُمَّ اَمَاتَهٗ فَاَقْبَرَهٗۙ‏ 
80:21. பின்னர் அவனை மரணிக்கச் செய்து மண்ணறைக்கு அனுப்புகிறான்.
80:22   ثُمَّ اِذَا شَآءَ اَنْشَرَهٗؕ‏ 
80:22. பின்னர் தான் நாடும்போது அவனை எழுப்புவான்.
80:23   كَلَّا لَـمَّا يَقْضِ مَاۤ اَمَرَهٗؕ‏ 
80:23. அவ்வாறில்லை! (இறைவன்) கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை.
80:24   فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤۙ‏ 
80:24. மனிதன் தனது உணவைக் கவனிக்கட்டும்!
80:25   اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۙ‏ 
80:25. நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம்.
80:26   ثُمَّ شَقَقْنَا الْاَرْضَ شَقًّا ۙ‏ 
80:26. பின்னர் பூமியை முறையாகப் பிளந்தோம்.
80:27   فَاَنْۢبَتْنَا فِيْهَا حَبًّا ۙ‏ 
80:28   وَّ عِنَبًا وَّقَضْبًا ۙ‏ 
80:29   وَّزَيْتُوْنًا وَّنَخْلًا ؕ‏ 
80:30   وَحَدَآٮِٕقَ غُلْبًا ۙ‏ 
80:31   وَّفَاكِهَةً وَّاَبًّا ۙ‏ 
80:32   مَّتَاعًا لَّـكُمْ وَلِاَنْعَامِكُمْؕ‏ 
80:27, 28, 29, 30, 31, 32. உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும், திராட்சையையும், புற்பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும், கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம்.26
80:33   فَاِذَا جَآءَتِ الصَّآخَّةُ‏ 
80:34   يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ اَخِيْهِۙ‏ 
<
80:35   وَاُمِّهٖ وَاَبِيْهِۙ‏ 
80:36   وَصَاحِبَتِهٖ وَبَنِيْهِؕ‏ 
80:33, 34, 35, 36. அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தாயையும், தந்தையையும், மனைவியையும், பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.26
80:37   لِكُلِّ امْرِیءٍ مِّنْهُمْ يَوْمَٮِٕذٍ شَاْنٌ يُّغْنِيْهِؕ‏ 
80:37. அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் முழுக் கவனத்தை ஈர்க்கும் காரியம் உண்டு.
80:38   وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ مُّسْفِرَةٌ ۙ‏ 
80:38. அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும்.
80:39   ضَاحِكَةٌ مُّسْتَبْشِرَةٌ ۚ‏ 
80:39. மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும்
80:40   وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ عَلَيْهَا غَبَرَةٌ ۙ‏ 
80:40. அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும்.
80:41   تَرْهَقُهَا قَتَرَةٌ ؕ‏ 
80:41. அவற்றைக் கருமை மூடியிருக்கும்.
80:42   اُولٰٓٮِٕكَ هُمُ الْكَفَرَةُ الْفَجَرَةُ‏ 
80:42. அவர்களே (ஏகஇறைவனை) மறுப்போரான பாவிகள்.

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 270076