75.   அல்கியாமா

இறைவன் முன்னால் நிற்கும் நாள்

மொத்த வசனங்கள் : 40

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கியாமத் நாள் என்று உள்ளதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

75:1   لَاۤ اُقْسِمُ بِيَوْمِ الْقِيٰمَةِۙ‏ 
75:1. கியாமத் நாள்1 மீது சத்தியம் செய்கிறேன்.
75:2   وَلَاۤ اُقْسِمُ بِالنَّفْسِ اللَّوَّامَةِؕ‏ 
75:2. குறை கூறிக்கொண்டிருக்கும் உள்ளத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.
75:3   اَيَحْسَبُ الْاِنْسَانُ اَلَّنْ نَّجْمَعَ عِظَامَهٗؕ‏ 
75:3. மனிதனின் எலும்புகளை ஒன்று திரட்ட மாட்டோம் என்று அவன் எண்ணுகிறானா?
75:4   بَلٰى قٰدِرِيْنَ عَلٰٓى اَنْ نُّسَوِّىَ بَنَانَهٗ‏ 
75:4. அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.208
75:5   بَلْ يُرِيْدُ الْاِنْسَانُ لِيَفْجُرَ اَمَامَهٗ‌ۚ‏ 
75:5. ஆனால் அவனுக்கு (இறைவனுக்கு) முன்னால் குற்றம் செய்யவே மனிதன் நாடுகிறான்.
75:6   يَسْـَٔـلُ اَيَّانَ يَوْمُ الْقِيٰمَةِؕ‏ 
75:6. "கியாமத் நாள்1 எப்போது?'' எனக் கேட்கிறான்.
75:7   فَاِذَا بَرِقَ الْبَصَرُۙ‏ 
75:8   وَخَسَفَ الْقَمَرُۙ‏ 
75:9   وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُۙ‏ 
75:10   يَقُوْلُ الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍ اَيْنَ الْمَفَرُّ‌ ۚ‏ 
75:7, 8, 9, 10. பார்வை நிலை குத்தும்போது, சந்திரனுக்குக் கிரகணம் ஏற்படும்போது, சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்க்கப்படும்போது, வெருண்டோடும் இடம் எங்கே என்று அந்நாளில் மனிதன் கேட்பான்26
75:11   كَلَّا لَا وَزَرَؕ‏ 
75:11. அவ்வாறில்லை! தப்பிக்கும் எந்த இடமும் இல்லை.
75:12   اِلٰى رَبِّكَ يَوْمَٮِٕذِ اۨلْمُسْتَقَرُّ ؕ‏ 
75:12. அந்நாளில் உமது இறைவனிடமே தங்குமிடம் இருக்கும்.
75:13   يُنَبَّؤُا الْاِنْسَانُ يَوْمَٮِٕذٍۢ بِمَا قَدَّمَ وَاَخَّرَؕ‏ 
75:13. அந்நாளில் மனிதன் முற்படுத்தியது பற்றியும், பிற்படுத்தியது பற்றியும் அறிவிக்கப்படுவான்.
75:14   بَلِ الْاِنْسَانُ عَلٰى نَفْسِهٖ بَصِيْرَةٌ ۙ‏ 
75:15   وَّلَوْ اَلْقٰى مَعَاذِيْرَهٗؕ‏ 
75:14, 15. மாறாக மனிதன் சமாதானங்களைக் கூறியபோதும் தன்னைப் பற்றி நன்கு தெரிந்தவனாக இருக்கிறான்.26
75:16   لَا تُحَرِّكْ بِهٖ لِسَانَكَ لِتَعْجَلَ بِهٖؕ‏ 
75:16. (முஹம்மதே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்!152
75:17   اِنَّ عَلَيْنَا جَمْعَهٗ وَقُرْاٰنَهٗۚ  ۖ‏ 
75:17. அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது.
75:18   فَاِذَا قَرَاْنٰهُ فَاتَّبِعْ قُرْاٰنَهٗ‌ۚ‏ 
75:18. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!152
75:19   ثُمَّ اِنَّ عَلَيْنَا بَيَانَهٗؕ‏ 
75:19. பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.
75:20   كَلَّا بَلْ تُحِبُّوْنَ الْعَاجِلَةَ ۙ‏ 
75:20. அவ்வாறில்லை! எனினும் நீங்கள் இம்மையை விரும்புகிறீர்கள்.
75:21   وَتَذَرُوْنَ الْاٰخِرَةَ ؕ‏ 
75:21. மறுமையை விட்டுவிடுகிறீர்கள்.
75:22   وُجُوْهٌ يَّوْمَٮِٕذٍ نَّاضِرَةٌ ۙ‏ 
75:22. அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும்.
75:23   اِلٰى رَبِّهَا نَاظِرَةٌ‌ ۚ‏ 
75:23. தமது இறைவனைப் பார்த்துக்488 கொண்டிருக்கும்.21
75:24   وَوُجُوْهٌ يَّوْمَٮِٕذٍۢ بَاسِرَةٌ ۙ‏ 
75:24. சில முகங்கள் அந்நாளில் சோகமாக இருக்கும்.
75:25   تَظُنُّ اَنْ يُّفْعَلَ بِهَا فَاقِرَةٌ ؕ‏ 
75:25. தமக்குப் பேராபத்து ஏற்படும் என அவை நினைக்கும்.
75:26   كَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِىَۙ‏ 
75:27   وَقِيْلَ مَنْ رَاقٍۙ‏ 
75:26, 27. அவ்வாறில்லை! உயிர், தொண்டைக்குழியை அடைந்து விடும்போது "மந்திரிப்பவன் யார்?'' எனக் கூறப்படும்.26
75:28   وَّظَنَّ اَنَّهُ الْفِرَاقُۙ‏ 
75:28. "அதுவே பிரிவு'' என்று அவன் விளங்கிக் கொள்வான்.
75:29   وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِۙ‏ 
75:29. காலோடு கால் பின்னிக் கொள்ளும்.
75:30   اِلٰى رَبِّكَ يَوْمَٮِٕذِ اۨلْمَسَاقُؕ‏ 
75:30. அந்நாளில் இழுத்துச் செல்லப்படுவது உமது இறைவனிடமே.
75:31   فَلَا صَدَّقَ وَلَا صَلّٰىۙ‏ 
75:31. அவன் நம்பவுமில்லை. தொழவுமில்லை.
75:32   وَلٰڪِنْ كَذَّبَ وَتَوَلّٰىۙ‏ 
75:32. மாறாக பொய்யெனக் கருதிப் புறக்கணித்தான்.
75:33   ثُمَّ ذَهَبَ اِلٰٓى اَهْلِهٖ يَتَمَطّٰىؕ‏ 
75:33. பின்னர் தனது குடும்பத்தினரிடம் கர்வமாகச் சென்றான்.
75:34   اَوْلٰى لَكَ فَاَوْلٰىۙ‏ 
75:34. உனக்கு நெருங்கி விட்டது! இன்னும் நெருங்கி விட்டது!
75:35   ثُمَّ اَوْلٰى لَكَ فَاَوْلٰىؕ‏ 
75:35. பின்னரும் உனக்கு நெருங்கி விட்டது! மேலும் நெருங்கி விட்டது!
75:36   اَيَحْسَبُ الْاِنْسَانُ اَنْ يُّتْرَكَ سُدًىؕ‏ 
75:36. வெறுமனே விடப்படுவான் என்று மனிதன் எண்ணுகிறானா?
75:37   اَلَمْ يَكُ نُطْفَةً مِّنْ مَّنِىٍّ يُّمْنٰىۙ‏ 
75:37. அவன் செலுத்தப்படும் விந்தின் சிறு துளியாக இருக்கவில்லையா?506
75:38   ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوّٰىۙ‏ 
75:38. பின்னர் கருவுற்ற சினைமுட்டையானான்.365& 506 பின்னர் (இறைவன்) படைத்துச் சீராக்கினான்.
75:39   فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْاُنْثٰىؕ‏ 
75:39. அவனிலிருந்து437 ஆண், பெண் என ஜோடியை ஏற்படுத்தினான்.
75:40   اَلَيْسَ ذٰلِكَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يُّحْـىِۦَ الْمَوْتٰى‏ 
75:40. இத்தகையவன் இறந்தோரை உயிர்ப்பிக்க ஆற்றலுடையவன் இல்லையா?

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 6968