111.   தப்பத்

அழிந்தது

மொத்த வசனங்கள் : 5

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் தப்பத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

111:1   تَبَّتْ يَدَاۤ اَبِىْ لَهَبٍ وَّتَبَّؕ‏ 
111:1. அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான்.
111:2   مَاۤ اَغْنٰى عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَؕ‏ 
111:2. அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை.
111:3   سَيَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍ ۖۚ‏ 
111:4   وَّامْرَاَ تُهٗ ؕ حَمَّالَةَ الْحَطَبِ‌ۚ‏ 
111:3, 4. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள்.26
111:5   فِىْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ‏ 
111:5. அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது. 356

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 44859