110.   அந்நஸ்ர்

உதவி

மொத்த வசனங்கள் : 3

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

110:1   اِذَا جَآءَ نَصْرُ اللّٰهِ وَالْفَتْحُۙ‏ 
110:1. அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது,
110:2   وَرَاَيْتَ النَّاسَ يَدْخُلُوْنَ فِىْ دِيْنِ اللّٰهِ اَفْوَاجًا ۙ‏ 
110:2. அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும்போது,
110:3   فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ‌ ؔؕ اِنَّهٗ كَانَ تَوَّابًا‏ 
110:3. உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக!493 அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.

 
free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 77732