102.   அத்தகாஸுர்

அதிகம் தேடுதல்

மொத்த வசனங்கள் : 8

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தகாஸுர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

102:1   اَلْهٰٮكُمُ التَّكَاثُرُۙ‏ 
102:2   حَتّٰى زُرْتُمُ الْمَقَابِرَؕ‏ 
102:1, 2. மண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.26
102:3   كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَۙ‏ 
102:4   ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُوْنَؕ‏ 
102:3, 4. அவ்வாறில்லை! அறிவீர்கள். பின்னரும் அவ்வாறில்லை! மீண்டும் அறிவீர்கள்.
102:5   كَلَّا لَوْ تَعْلَمُوْنَ عِلْمَ الْيَقِيْنِؕ‏ 
102:6   لَتَرَوُنَّ الْجَحِيْمَۙ‏ 
102:5, 6. அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.26
102:7   ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِيْنِۙ‏ 
102:7. பின்னர் மிக உறுதியாக அதை அறிவீர்கள்.
102:8   ثُمَّ لَـتُسْـَٔـلُنَّ يَوْمَٮِٕذٍ عَنِ النَّعِيْمِ‏ 
102:8. பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 219866