96.   அல் அலக்

கருவுற்ற சினை முட்டை

மொத்த வசனங்கள் : 19

இந்த அத்தியாயத்தின் இரண்டாவது வசனத்தில் அலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

96:1   اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ‌ۚ‏ 
96:1. (முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!281
96:2   خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍ‌ۚ‏ 
96:2. அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து365& 450 படைத்தான்.368
96:3   اِقْرَاْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ‏ 
96:3. ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன்.
>
96:4   الَّذِىْ عَلَّمَ بِالْقَلَمِۙ‏ 
96:4. அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்.
96:5   عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْؕ‏ 
96:5. அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.
96:6   كَلَّاۤ اِنَّ الْاِنْسَانَ لَيَطْغٰٓىۙ‏ 
96:7   اَنْ رَّاٰهُ اسْتَغْنٰىؕ‏ 
96:8   اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجْعٰىؕ‏ 
96:6, 7. அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான்.26
96:8. உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.
96:9   اَرَءَيْتَ الَّذِىْ يَنْهٰىؕ‏ 
>
96:10   عَبْدًا اِذَا صَلّٰىؕ‏ 
96:9, 10. தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா?26& 32
96:11   اَرَءَيْتَ اِنْ كَانَ عَلَى الْهُدٰٓىۙ‏ 
96:12   اَوْ اَمَرَ بِالتَّقْوٰىۙ‏ 
96:13   اَرَءَيْتَ اِنْ كَذَّبَ وَتَوَلّٰىؕ‏ 
96:11, 12, 13. அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?26
96:14   اَلَمْ يَعْلَمْ بِاَنَّ اللّٰهَ يَرٰىؕ‏ 
96:14. அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?
96:15   كَلَّا لَٮِٕنْ لَّمْ يَنْتَهِ  ۙ لَنَسْفَعًۢا بِالنَّاصِيَةِۙ‏ 
96:15. அவ்வாறில்லை! அவன் விலகாவிட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம்.
96:16   نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ‌ ۚ‏ 
96:16. அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி.426
96:17   فَلْيَدْعُ نَادِيَهٗ ۙ‏ 
96:17. அவன் தனது சபையோரை அழைக்கட்டும்.
96:18   سَنَدْعُ الزَّبَانِيَةَ ۙ‏ 
96:18. நாம் நரகின் காவலர்களை அழைப்போம்.
96:19   كَلَّا ؕ لَا تُطِعْهُ وَاسْجُدْ وَاقْتَرِبْ۩‏ 
96:19. எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக!396 நெருங்குவீராக!

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 47304