90.   அல்பலது

அந்த நகரம்

மொத்த வசனங்கள் : 20

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அந்த நகரம் என்று இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

90:1   لَاۤ اُقْسِمُ بِهٰذَا الْبَلَدِۙ‏ 
90:2   وَاَنْتَ حِلٌّ ۢ بِهٰذَا الْبَلَدِۙ‏ 
90:1, 2. (முஹம்மதே!) இந்நகரில் (மக்காவில்) நீர் வசிக்கும் நிலையில் இந்த நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.26
90:3   وَوَالِدٍ وَّمَا وَلَدَ ۙ‏ 
90:3. பெற்றவன் மீதும், அவன் பெற்றெடுத்ததன் மீதும் சத்தியமாக!379
90:4   لَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ فِىْ كَبَدٍؕ‏ 
90:4. மனிதனைக் கஷ்டப்படுபவனாகவே நாம் படைத்துள்ளோம்.368
90:5   اَيَحْسَبُ اَنْ لَّنْ يَّقْدِرَ عَلَيْهِ اَحَدٌ‌ ۘ‏ 
90:5. தன் மீது யாரும் சக்தி பெற மாட்டார்கள் என்று அவன் எண்ணுகிறானா?
90:6   يَقُوْلُ اَهْلَكْتُ مَالًا لُّبَدًا ؕ‏ 
90:6. "ஏராளமான செல்வத்தை (கொடுத்து) அழித்து விட்டேன்'' எனக் கூறுகிறான்.
90:7   اَيَحْسَبُ اَنْ لَّمْ يَرَهٗۤ اَحَدٌ ؕ‏ 
90:7. அவனை யாரும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?
90:8   اَلَمْ نَجْعَلْ لَّهٗ عَيْنَيْنِۙ‏ 
90:9   وَلِسَانًا وَّشَفَتَيْنِۙ‏ 
90:8, 9. அவனுக்கு இரண்டு கண்களையும், நாவையும், இரு உதடுகளையும் நாம் அமைக்கவில்லையா?26
90:10   وَهَدَيْنٰهُ النَّجْدَيْنِ‌ۚ‏ 
90:10. (நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?
90:11   فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ۖ‏ 
90:11. அவன் கணவாயைக் கடக்கவில்லை.
90:12   وَمَاۤ اَدْرٰٮكَ مَا الْعَقَبَةُ ؕ‏ 
90:12. கணவாய் என்பது என்னவென்பது உமக்கு எப்படித் தெரியும்?
90:13   فَكُّ رَقَبَةٍ ۙ‏ 
90:14   اَوْ اِطْعٰمٌ فِىْ يَوْمٍ ذِىْ مَسْغَبَةٍ ۙ‏ 
90:15   يَّتِيْمًا ذَا مَقْرَبَةٍ ۙ‏ 
90:16   اَوْ مِسْكِيْنًا ذَا مَتْرَبَةٍ ؕ‏ 
90:17   ثُمَّ كَانَ مِنَ الَّذِيْنَ اٰمَنُوْا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ؕ‏ 
90:13, 14, 15, 16, 17. அடிமையை விடுதலை செய்தல், அல்லது நெருங்கிய உறவுடைய அனாதைக்கும், அல்லது வறுமையில் உழலும் ஏழைக்கும் பட்டினி காலத்தில் உணவளித்தல், பின்னர் நம்பிக்கை கொண்டு பொறுமையைப் போதித்து இரக்கத்தையும் போதித்தோரில் இணைதல் (இவைகளே கணவாய்).
90:18   اُولٰٓٮِٕكَ اَصْحٰبُ الْمَيْمَنَةِ ؕ‏ 
90:18. அவர்களே வலப்புறத்தார்.
90:19   وَالَّذِيْنَ كَفَرُوْا بِاٰيٰتِنَا هُمْ اَصْحٰبُ الْمَشْـَٔـمَةِ ؕ‏ 
90:19. யார் நமது வசனங்களை மறுக்கிறார்களோ அவர்களே இடப்புறத்தார்.
90:20   عَلَيْهِمْ نَارٌ مُّؤْصَدَةٌ‏ 
90:20. அவர்கள் மீது மூட்டப்பட்ட நெருப்பு இருக்கும்.

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 45156