89.   அல்ஃபஜ்ரு

வைகறை

மொத்த வசனங்கள் : 30

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

89:1   وَالْفَجْرِۙ‏ 
89:1. வைகறையின் மீது சத்தியமாக!379
89:2   وَلَيَالٍ عَشْرٍۙ‏ 
89:2. பத்து இரவுகள்387 மீதும் சத்தியமாக!379
89:3   وَّالشَّفْعِ وَالْوَتْرِۙ‏ 
89:3. இரட்டையின் மீதும், ஒற்றையின் மீதும் சத்தியமாக!379
89:4   وَالَّيْلِ اِذَا يَسْرِ‌ۚ‏ 
89:4. கடந்து செல்லும் இரவின் மீது சத்தியமாக!379
89:5   هَلْ فِىْ ذٰلِكَ قَسَمٌ لِّذِىْ حِجْرٍؕ‏ 
89:5. அறிவுடையோருக்கு (போதிய) சத்தியம் இதில் இருக்கிறதா?
89:6   اَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍۙ‏ 
89:7   اِرَمَ ذَاتِ الْعِمَادِۙ‏ 
89:6, 7. ஆது சமுதாயத்தையும், தூண்களையுடைய இரம் சமுதாயத்தையும் உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?26
89:8   الَّتِىْ لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِى الْبِلَادِۙ‏ 
89:8. உலகில் அவர்களைப் போல் (யாரும்) படைக்கப்படவில்லை.
89:9   وَثَمُوْدَ الَّذِيْنَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِۙ‏ 
89:10   وَفِرْعَوْنَ ذِى الْاَوْتَادِۙ‏ 
89:9, 10. மலையடிவாரத்தில் பாறையைக் குடைந்(து வாழ்ந்)த ஸமூது சமுதாயத்தையும், படைகளுடைய ஃபிர்அவ்னையும் (எப்படி ஆக்கினான்?)26
89:11   الَّذِيْنَ طَغَوْا فِى الْبِلَادِۙ‏ 
89:11. அவர்கள் உலகில் வரம்பு மீறிக் கொண்டிருந்தனர்.
89:12   فَاَكْثَرُوْا فِيْهَا الْفَسَادَۙ‏ 
89:12. அதில் குழப்பத்தை அதிகமாக்கினார்கள்.
89:13   فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ۙۚ‏ 
89:13. எனவே உமது இறைவன் அவர்களுக்கு எதிராக வேதனையின் சாட்டையைச் சுழற்றினான்.
89:14   اِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِؕ‏ 
89:14. உமது இறைவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
89:15   فَاَمَّا الْاِنْسَانُ اِذَا مَا ابْتَلٰٮهُ رَبُّهٗ فَاَكْرَمَهٗ وَنَعَّمَهٗ  ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَكْرَمَنِؕ‏ 
89:15. மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச்செய்து இன்பத்தையும் வழங்கி சோதிக்கும்போது484 "என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்'' என்று கூறுகிறான்.
89:16   وَاَمَّاۤ اِذَا مَا ابْتَلٰٮهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهٗ ۙ فَيَقُوْلُ رَبِّىْۤ اَهَانَنِ‌ۚ‏ 
89:16. அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும்போது484 "என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்'' எனக் கூறுகிறான்.
89:17   كَلَّا‌ بَلْ لَّا تُكْرِمُوْنَ الْيَتِيْمَۙ‏ 
89:17. அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை.
89:18   وَلَا تَحٰٓضُّوْنَ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۙ‏ 
89:18. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை.
89:19   وَتَاْكُلُوْنَ التُّرَاثَ اَكْلًا لَّـمًّا ۙ‏ 
89:19. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள்.
89:20   وَّتُحِبُّوْنَ الْمَالَ حُبًّا جَمًّا ؕ‏ 
89:20. செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள்.
89:21   كَلَّاۤ اِذَا دُكَّتِ الْاَرْضُ دَكًّا دَكًّا ۙ‏ 
89:21. அவ்வாறில்லை! பூமி தூள்தூளாக நொறுக்கப்படும்போது,
89:22   وَّجَآءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ۚ‏ 
89:22. வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும்488போது,
89:23   وَجِاىْٓءَ يَوْمَٮِٕذٍۢ بِجَهَنَّمَ  ۙ‌ يَوْمَٮِٕذٍ يَّتَذَكَّرُ الْاِنْسَانُ وَاَنّٰى لَـهُ الذِّكْرٰىؕ‏ 
89:23. அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?
89:24   يَقُوْلُ يٰلَيْتَنِىْ قَدَّمْتُ لِحَـيَاتِى‌ۚ‏ 
89:24. "எனது (மறுமை) வாழ்க்கைக்காக (நல்லறங்களை) நான் முற்படுத்தியிருக்கக் கூடாதா?'' என்று கூறுவான்.
89:25   فَيَوْمَٮِٕذٍ لَّا يُعَذِّبُ عَذَابَهٗۤ اَحَدٌ ۙ‏ 
89:25. அந்நாளில் அவன் தண்டிக்குமளவுக்கு யாரும் தண்டிக்க முடியாது.
89:26   وَّلَا يُوْثِقُ وَثَاقَهٗۤ اَحَدٌ ؕ‏ 
89:26. அவன் கட்டுவது போல் யாரும் கட்ட முடியாது.
89:27   يٰۤاَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَٮِٕنَّةُ  ۖ‏ 
89:28   ارْجِعِىْۤ اِلٰى رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً‌ ۚ‏ 
89:27, 28. அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக!
89:29   فَادْخُلِىْ فِىْ عِبٰدِىۙ‏ 
89:29. எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக!
89:30   وَادْخُلِىْ جَنَّتِى‏ 
89:30. எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்.)

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 47069