78.   அந்நபா

அந்தச் செய்தி

மொத்த வசனங்கள் : 40

இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்தில் அந்தச் செய்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

78:1   عَمَّ يَتَسَآءَلُوْنَ‌ۚ‏ 
78:1. எதைப் பற்றி அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்?
78:2   عَنِ النَّبَاِ الْعَظِيْمِۙ‏ 
78:3   الَّذِىْ هُمْ فِيْهِ مُخْتَلِفُوْنَؕ‏ 
78:2, 3. எதில் அவர்கள் முரண்பட்டிருக்கிறார்களோ அந்த மகத்தான செய்தியைப் பற்றி!26
78:4   كَلَّا سَيَعْلَمُوْنَۙ‏ 
78:4. அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.
78:5   ثُمَّ كَلَّا سَيَعْلَمُوْنَ‏ 
78:5. பின்னரும் அவ்வாறில்லை! அறிந்து கொள்வார்கள்.
78:6   اَلَمْ نَجْعَلِ الْاَرْضَ مِهٰدًا ۙ‏ 
78:7   وَّالْجِبَالَ اَوْتَادًا ۙ‏ 
78:6, 7. பூமியைத் தொட்டிலாகவும்,284 மலைகளை முளைகளாகவும்248 நாம் ஆக்கவில்லையா?26
78:8   وَّخَلَقْنٰكُمْ اَزْوَاجًا ۙ‏ 
78:8. உங்களை ஜோடிகளாகப் படைத்தோம்.
78:9   وَّجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا ۙ‏ 
78:9. உங்கள் தூக்கத்தை ஓய்வாக ஆக்கினோம்.
78:10   وَّجَعَلْنَا الَّيْلَ لِبَاسًا ۙ‏ 
78:10. இரவை ஆடையாக்கினோம்.
78:11   وَّجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا‏ 
78:11. பகலை வாழ்வதற்கான நேரமாக ஆக்கினோம்.
78:12   وَّبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا ۙ‏ 
78:12. உங்களுக்கு மேல் பலமான ஏழினை (ஏழு வானங்களை) அமைத்தோம்.
78:13   وَّ جَعَلْنَا سِرَاجًا وَّهَّاجًا ۙ‏ 
78:13. ஒளி வீசும் விளக்கையும் ஏற்படுத்தினோம்.
78:14   وَّاَنْزَلْنَا مِنَ الْمُعْصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۙ‏ 
78:15   لِّـنُخْرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۙ‏ 
78:16   وَّجَنّٰتٍ اَلْفَافًا ؕ‏ 
78:14, 15, 16. தானியத்தையும், தாவரத்தையும், அடர்த்தியான சோலைகளையும் நாம் வெளிப்படுத்துவதற்காக கார்மேகங்களிலிருந்து அதிகமான நீரை இறக்கி வைத்தோம்.26
78:17   اِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيْقَاتًا ۙ‏ 
78:17. தீர்ப்பு நாள்1 நேரம் குறிக்கப்பட்டதாக இருக்கிறது.
78:18   يَّوْمَ يُنْفَخُ فِى الصُّوْرِ فَتَاْتُوْنَ اَفْوَاجًا ۙ‏ 
78:18. ஸூர் ஊதப்படும் நாளில் பல கூட்டங்களாக வருவீர்கள்.
78:19   وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتْ اَبْوَابًا ۙ‏ 
78:19. வானம்507 திறக்கப்பட்டு பல வாசல்களாக ஆகும்.
78:20   وَّ سُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا ؕ‏ 
78:20. மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராக ஆகும்.
78:21   اِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا ۙ‏ 
78:22   لِّلطّٰغِيْنَ مَاٰبًا ۙ‏ 
78:21, 22. வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது.26
78:23   لّٰبِثِيْنَ فِيْهَاۤ اَحْقَابًا‌ ۚ‏ 
78:23. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள்.
78:24   لَا يَذُوْقُوْنَ فِيْهَا بَرْدًا وَّلَا شَرَابًا ۙ‏ 
78:24. அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.
78:25   اِلَّا حَمِيْمًا وَّغَسَّاقًا ۙ‏ 
78:25. கொதி நீரையும், சீழையும் தவிர.
78:26   جَزَآءً وِّفَاقًا ؕ‏ 
78:26. இது செயலுக்கேற்ற கூலி!
78:27   اِنَّهُمْ كَانُوْا لَا يَرْجُوْنَ حِسَابًا ۙ‏ 
78:27. அவர்கள் (நமது) விசாரணையை நம்பாதிருந்தனர்.
78:28   وَّكَذَّبُوْا بِاٰيٰتِنَا كِذَّابًا ؕ‏ 
78:28. நமது வசனங்களை ஒரேயடியாகப் பொய்யெனக் கருதினர்.
78:29   وَكُلَّ شَىْءٍ اَحْصَيْنٰهُ كِتٰبًا ۙ‏ 
78:29. ஒவ்வொரு பொருளையும் எழுத்தில் நாம் வரையறுத்துள்ளோம்.
78:30   فَذُوْقُوْا فَلَنْ نَّزِيْدَكُمْ اِلَّا عَذَابًا‏ 
78:30. சுவைத்துப் பாருங்கள்! உங்களுக்கு வேதனையைத் தவிர வேறு எதையும் அதிகமாக்க மாட்டோம்.
78:31   اِنَّ لِلْمُتَّقِيْنَ مَفَازًا ۙ‏ 
78:32   حَدَآٮِٕقَ وَاَعْنَابًا ۙ‏ 
78:33   وَّكَوَاعِبَ اَتْرَابًا ۙ‏ 
78:34   وَّكَاْسًا دِهَاقًا ؕ‏ 
78:31, 32, 33, 34. இறையச்சமுடையோருக்கு வெற்றித் தலமும், தோட்டங்களும், திராட்சைகளும், சமவயதுடைய கட்டழகியரும், நிரம்பிய கிண்ணங்களும் உண்டு.26
78:35   لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَـغْوًا وَّلَا كِذّٰبًا‌ ۚ‏ 
78:35. அங்கே வீணானதையோ, பொய்யையோ செவியுற மாட்டார்கள்.
78:36   جَزَآءً مِّنْ رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۙ‏ 
78:36. இது உமது இறைவனிடமிருந்து கணக்கிட்டு வழங்கப்பட்ட கூலி.
78:37   رَّبِّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا الرَّحْمٰنِ‌ لَا يَمْلِكُوْنَ مِنْهُ خِطَابًا‌ ۚ‏ 
78:37. அவன் வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றின் இறைவன்; அளவற்ற அருளாளன். அவனிடம் உரையாடவும் அவர்களுக்கு இயலாது.
78:38   يَوْمَ يَقُوْمُ الرُّوْحُ وَالْمَلٰٓٮِٕكَةُ صَفًّا ؕۙ لَّا يَتَكَلَّمُوْنَ اِلَّا مَنْ اَذِنَ لَهُ الرَّحْمٰنُ وَقَالَ صَوَابًا‌‏ 
78:38. ரூஹும்,444 வானவர்களும் அணி வகுத்து நிற்கும் நாளில் அளவற்ற அருளாளன் அனுமதியளித்து, நேர்மையைக் கூறுபவரைத் தவிர யாரும் பேச மாட்டார்கள்.
78:39   ذٰلِكَ الْيَوْمُ الْحَـقُّ‌ ۚ فَمَنْ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ مَاٰبًا‏ 
78:39. இதுவே உண்மையான நாள்!1 விரும்புகிறவர் தமது இறைவனை நோக்கி ஒதுங்குமிடத்தை எடுத்துக் கொள்ளட்டும்.
78:40   اِنَّاۤ اَنْذَرْنٰـكُمْ عَذَابًا قَرِيْبًا ۖۚ  يَّوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدٰهُ وَيَقُوْلُ الْـكٰفِرُ يٰلَيْتَنِىْ كُنْتُ تُرٰبًا‏ 
78:40. சமீபத்தில் உள்ள வேதனை குறித்து உங்களை நாம் எச்சரிக்கிறோம். அந்நாளில் தான் செய்த வினையை மனிதன் காண்பான். நான் மண்ணாக ஆகியிருக்கக் கூடாதா? என்று (ஏகஇறைவனை) மறுப்பவன் கூறுவான்

 








free counters
மொழிபெயர்ப்பு : பீ.ஜைனுல் ஆபிதீன் | © 2024 tamilquran.in. Developed By Jassoft.
You 're visitors No. 44903