பாடம் : 47 சூனியம்88 அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் (யூதர்கள்) சுலைமானுடைய ஆட்சியி(ன் காலத்தி)ல் ஷைத்தான்கள் (கற்பனை செய்து) கூறியவற்றையே பின்பற்றி னர். (உண்மையில்) சுலைமான் நிராகரித்தவர் அல்லர்; ஆனால், ஷைத்தான்கள்தாம் நிராகரித்தனர். மக்களுக்குச் சூனியத்தையும், பாபிலோனில் இருந்த ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கு வழங்கப்பட்டதையும் கற்பித்துவந்தனர். (உண்மையில்) அவ்விருவரும் நாங்கள் ஒரு சோதனையாகவே இருக்கின் றோம். (இதைக் கற்பதன் மூலம்) நீங்கள் நிராகரிப்பவராகிவிடாதீர்கள் என்று கூறும் வரை எவருக்கும் (சூனியத்தைக்) கற்பிக்க வில்லை. இறுதியாக, அவர்கள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிளவை உண்டு பண்ணக்கூடிய(சூனியத்)தை அவ்விருவரிடமி ருந்து தெரிந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் நாட்டமின்றி இ(ந்தச் சூனியத்)தைக் கொண்டு எவருக்கும் அவர்கள் தீங்கிழைத்துவிட முடியாது. தங்களுக்குப் பலனளிக்காத, தீங்கு தருகின்றவற்றையே அவர்கள் கற்றுக்கொள்கி றார்கள். இ(ந்தச் சூனியத்)தை விலைக்கு வாங்கிக்கொள்பவனுக்கு மறுமையில் எந்தப் பேறும் இல்லை என்பதை அவர்கள் உறுதியாக அறிந்தே இருந்தனர். (2:102) அல்லாஹ் கூறுகின்றான்: சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான் (20:69). அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின் பக்கம் வருகிறீர் களா? (21:3). அல்லாஹ் கூறுகின்றான்: அவர்களுடைய கயிறுகளும் அவர்களு டைய தடிகளும் அவர்களின் சூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது (20:66). அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே! கூறுக:) இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புக் கோருகிறேன்) (113:4). இவ்வசனத்திலுள்ள ஊதும் பெண்கள்" (நஃப்பாஸாத்) என்பது சூனியக்காரிகளைக் குறிக்கும். (23:89ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) துஸ்ஹரூன்" எனும் சொல்லுக்குக் கண்மூடியவர்களாக"என்று பொருள்.
5763. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு `பனூஸுரைக்` குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள். இறுதியில், அவர்கள் `ஒரு நாள்` அல்லது `ஓரிரவு` என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.
பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனிடம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்துவிட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், `இந்த மனிதரின் நோய் என்ன?` என்று கேட்டார். அத்தோழர், `இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது` என்று சொல்ல, முதலாமவர் `இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்?` என்று கேட்டார். தோழர், `லபீத் இப்னு அஃஸம் (எனும் யூதன்)` என்று பதிலளித்தார். அவர், `எதில் வைத்திருக்கிறான்?` என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும்` என்று பதிலளித்தார். அவர், `அது எங்கே இருக்கிறது?` என்று கேட்க, மற்றவர், `(பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) `தர்வான்` எனும் கிணற்றில்` என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து, `ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன` என்று கூறினார்கள்.
நான், `இறைத்தூதர் அவர்களே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?` என்று கேட்டேன். அதற்கு அவர்கள், `அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாம்) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன் (எனவேதான் அதை நான் வெளியே எடுக்கவில்லை)` என்று கூறினார்கள். பிறகு அந்தக் கிணற்றைக் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப்பட்டது. 89
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், (சீப்பிலும் சிக்கு முடியிலும் என்பதற்கு பதிலாக) `சீப்பிலும் சணல் நாரிலும்` என்று காணப்படுகிறது. தலையை வாரும்போது கழியும் முடிக்கே `முஷாதத்` (சிக்கு முடி) எனப்படும். சணலை நூற்கும்போது வெளிவரும் நாருக்கே `முஷாகத்` (சணல் நார்) எனப்படும்.
Book : 76