2633. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
அல்லாஹ்வின் தூதரிடம் கிராமவாசி ஒருவர் வந்து ஹிஜ்ரத்தைப் பற்றிக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், `அல்லாஹ் உனக்குக் கருணை புரியட்டும். ஹிஜ்ரத் செய்வது ஒரு கடினமான காரியம். உன்னிடம் ஒட்டகம் இருக்கிறதா?` என்று கேட்டார்கள். அதற்கு அவர், `ஆம்" என்று கூறினார். `அதற்கு நீ ஸகாத் கொடுக்கிறாயா?` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், `ஆம், (கொடுக்கிறேன்)" என்று பதிலளித்தார். `(அதன் பாலைப் பிறர் உபயோகித்துக் கொள்ள) அதை இரவலாக (மனீஹாவாக) கொடுக்கிறாயா?` என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், `ஆம், (கொடுக்கிறேன்)" என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், `அது நீர் அருந்தும் முறைவரும் நாளில் அதனிடம் பால் கறக்கிறாயா?` என்று கேட்க அவர், `ஆம்" என்று பதிலளித்தார். `அப்படியாயின், கடல்களுக்கு அப்பால் சென்று(கூட) நீ வேலை செய். ஏனெனில், அல்லாஹ் உன் நற்செயல்(களின் பிரதிபலன்)களிலிருந்து எதையும் குறைக்க மாட்டான்" என்று கூறினார்கள்.
Book :51