பாடம் : 6 ஒருவரைக் கூலிக்கு அமர்த்தும் போது வேலை செய்யும் காலத்தைக் குறிப்பிட்டு, வேலையைக் குறிப்பிடாமல் இருத்தல். அல்லாஹ் கூறுகிறான் : (அப்போது ýஐப் ளஅலைன அவர்கள், மூசா ளஅலைன அவர்களிடம்) கூறினார் : நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க நான் நாடுகிறேன்! ஆயினும், நீர் பத்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்! நான் உமக்குச் சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர்! அதற்கு மூசா (அலை) அவர்கள் கூறினார்கள்: இதுவே எனக்கும் உங்களுக்குமிடையே (ஒப்பந்தமாகும்)! இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் (அதன் பிறகு) எவ்விதத்திலும் எனக்கு சிரமம் தரக்கூடாது! நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான்! (28:27-28) பாடம் : 7 விழும் நிலையில் இருக்கும் சுவரைச் செப்பனிட்டு நிலை நிறுத்துவதற்காக வேலையாளை அமர்த்திட அனுமதியுண்டு.
2267. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(மூஸா(அலை), ஹிள்ரு(அலை) ஆகிய) இருவரும் (ஒன்றாக) நடந்து சென்றபோது, விழும் நிலையிலிருந்த ஒரு சுவரைக் கண்டார்கள். உடனே, ஹிள்ரு(அலை) அவர்கள் தங்களின் கையை உயர்த்த, அது நேராக நின்றுவிட்டது! அப்போது மூஸா(அலை) அவர்கள், ஹிள்ரு(அலை) அவர்களிடம் `நீர் விரும்பியிருந்தால் இதற்குக் கூலி வாங்கியிருக்கலாமே!" என்று கூறினார்கள்"
என உபை இப்னு கஅபு(ரலி) அறிவித்தார்.
"ஹிள்ரு(அலை) அவர்கள் தம் கையை உயர்த்தினார்கள்` என்று சொன்னபோது, அறிவிப்பாளர் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் (ஹிள்ரு) (அலை) அவர்களைப் போன்று) கையை உயர்த்திக் காட்டி `இப்படி!" என்று கூறினார்கள்.
"ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்கள் `ஹிள்ரு(அலை) அவர்கள் சுவரைத் தம் கரத்தால் தடவ, அதுநேராக நின்றுவிட்டது!` என்று கூறினார்கள் என நான் நினைக்கிறேன்" என்று அறிவிப்பாளர் யஃலா(ரஹ்) அவர்கள் (சந்தேகத்துடன்) கூறுகிறார்கள்.
Book : 37